வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படையின் பறைசாற்றும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது. பகலிரவு பாராமல் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன. இந்த ஒத்திகைக்கு தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போர்விமானங்கள், போர்ஹெலிகாப்டர்கள் ஆகியவை பகலிரவாக ஒத்திகையில் ஈடுபட்டன. எஎல்எச் மற்றும் ஆகாஷ் வகை விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. எம்ஐஜி-29 போர் விமானங்கள், எஸ்யு-30, மிராஜ்2000, ஜாக்குவார், மிக்-21 பைசன், மிக்-27, மிக்-29, ஐஎல்78, ஹெர்குலஸ் ஏஎன்-32 விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. மேலும், எஸ்யு-30, மிக்-27, எல்சிஏ தேஜாஸ், மிராஜ்-2000, ஹாக் ஆகிய போர்விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டன.
#WATCH Vayu Shakti 2019, firepower demonstration of the Indian Air Force at Pokhran Range in Rajasthan. pic.twitter.com/sdSV5ZxC2n
— ANI (@ANI) February 16, 2019