உத்தரகாண்ட் ஹல்த்வானியில் வன்முறை வெடித்தது ஏன்? தொடரும் பதற்றம்.. 6 பேர் பலி, 300 பேர் காயம்

Haldwani Violence News: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி, 300 பேர் காயம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 9, 2024, 02:10 PM IST
உத்தரகாண்ட் ஹல்த்வானியில் வன்முறை வெடித்தது ஏன்? தொடரும் பதற்றம்.. 6 பேர் பலி, 300 பேர் காயம் title=

Uttarakhand News In Tamil: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதை ஒட்டிய மசூதி இடிக்கப்பட்டதால் வன்முறை மூண்டது. இந்த வன்முறையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தந்தை, மகன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஹல்த்வானி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் சுமார் 100-க்கும் அதிகமான அதிகாரிகளும் அடங்குவார்கள். 

உத்தரகாண்ட் ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு

மேலும் நேற்று (வியாழக்கிழமை) நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கலவரக்காரர்களை கண்டால் சுட்டுக் கொல்ல நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு உள்ளன.

மேலும் படிக்க - Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

ஹல்த்வானியில் எதனால் வன்முறை வெடித்தது?

ஹல்த்வானியின் வன்புல்புரா பகுதியில் அமைந்துள்ள மாலிக்கின் தோட்டத்தில் அரசு நிலத்தில் ஒரு மதரஸாவும் மசூதியும் கட்டப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஹல்த்வானி மாநகராட்சி இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, இரு இடங்களுக்கும் சீல் வைத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது.

நேற்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் மதரஸா புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

ஹல்த்வானியில் வன்முறை வெடித்தது

மதரஸா மீதான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மக்கள் கற்களை வீசி தாக்கினர். மதரஸாவை இடிக்கும் பணி தொடங்கியவுடன், ஆத்திரமடைந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். 

நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியதால், ஆத்திரமடைந்த சிலர் சட்ட அமலாக்க அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 

இதில் பொதுமக்கள் உட்பட அதிகாரிகள் சிலர் காயம் அடைந்தனர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. 

போலீஸ் ஜீப், ஜேசிபி, தீயணைப்பு வாகனம், இருசக்கர வாகனங்கள் என 70க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அங்கு இருந்த டிரான்ஸ்பார்மருக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் இருளில் மூழ்கியது.

மேலும் படிக்க - பிரதமர் மோடி OBC சமூகமா... இல்லையா...? - பாஜக, காங்கிரஸ் சொல்வது என்ன?

கலவரக்காரர்களை கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவு

வன்முறை கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். மறுபுறம் போலீஸ் ரோந்து கார் உட்பட பல வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் பன்புல்புரா காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

வன்முறை காரணமாக தொடர்ந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், கண்டால் சுட உத்தரவிட்டார் மற்றும் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹல்த்வானி முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வன்முறை சம்பத்தால் காயமடைந்தவர்கள் சோபன் சிங் ஜீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தலை மற்றும் முகத்தில் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க - மோடி அரசின் 10 ஆண்டு கால "தோல்விகள்" -கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்

அனைவரும் அமைதி காக்க வேண்டும் -உத்தரகாண்ட் முதல்வர்

வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, ஹல்த்வானியின் நிலைமையை மறுஆய்வு செய்ய மாநில தலைநகர் டேராடூனில் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அபினவ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் சிங் தாமி உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

நிலைமையை ஆய்வு செய்த உத்தரகாண்ட் முதல்வர், அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் மற்றும் மத்திய படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்துள்ளார்.

இடிப்பதை தடுக்கக் கோரிய மனு மீதான விசாரணை

நேற்று (வியாழக்கிழமை) உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் மதரஸா மற்றும் மசூதியை இடிப்பதை நிறுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. 

அதைத் தொடர்ந்து இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கியது. அடுத்து இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க - PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு... மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News