மின்சார கட்டணத்தை குறைக்க விரைவில் வருகிறது Prepaid Meter...

உத்திர பிரதேச மாநிலத்தில் நவம்பர் 15 முதல் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அம்மாநில எரிசக்தி அமைச்சர் திட்டமிட்டுள்ளார். 

Last Updated : Oct 30, 2019, 11:13 AM IST
மின்சார கட்டணத்தை குறைக்க விரைவில் வருகிறது Prepaid Meter... title=

உத்திர பிரதேச மாநிலத்தில் நவம்பர் 15 முதல் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அம்மாநில எரிசக்தி அமைச்சர் திட்டமிட்டுள்ளார். 

அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் பணி துவங்கும் எனவும், மாநில மக்களுக்கு மலிவான மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்., மின்சார மசோதாவை தாக்கல் செய்தபோது., தற்போது வசூளிக்கப்படும் மின்சார கட்டணம் சரியானது அல்ல என அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். இதை மனதில் கொண்டு, மக்களின் அரசு வீடுகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை முதலில் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். முதற்கட்டமாக ஒரு லட்சம் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டருக்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், இந்த மீட்டர்கள் ரசீது வரிசையின் படி நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, இதுபோன்ற புகழ்பெற்ற நபர்கள் அனைவருக்கும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களைப் பெறுமாறு முறையீடு செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில், அரசு துறைகள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது. அதன் மீட்புக்காக, மாநில அரசு தவணை முறையில் கட்டணத்தை செலுத்த விருப்ப வகை வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News