ஒரு வினோதமான சம்பவத்தில், உத்தரபிரதேசத்தில், பஸ்தி மாவட்டத்தின் oரு கிராமத்தில் ஒரு சிறுவன் தன்னை, கடந்த ஒரு மாதத்தில் ஒரே பாம்பு எட்டு முறை கடித்ததாகக் கூறுகிறார். ஆனால்அவர் அதிசயமாக ஒவ்வொரு முறையும் உயிர் பிழைத்து வருகிறார்.
ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்ராஜ் மிஸ்ரா பலமுறை பாம்பு கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பு கடைசியாக ஒரு வாரம் முன்பு டாக்டர்களைத் தவிர, கிராமத்தில் உள்ள பாம்பு மந்திரவாதியிடமும் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர்.
“எனது மகனை ஒரே பாம்பு பல முறை கடித்தது. அவனை பகதூர்பூர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் ராம்ஜி சுக்லாவின் இடத்திற்கு அனுப்பினேன் அப்போது ஒரு பாம்பு கடித்தது. சில நாட்களுக்குப் பிறகு, என் மகன் அதே பாம்பை வீட்டின் அருகே பார்த்தான். அது மீண்டும் அவனை கடித்தது. இவ்வாறு இது வரை எட்டு முறை இந்த பாம்பு அந்த சிறுவனை குறி வைத்து வருகிறது. யஷ்ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது ”என்று தந்தை சந்திரமவுலி மிஸ்ரா கூறினார்.
கடைசி சம்பவம் ஆகஸ்ட் 25 அன்று நடந்தது. அவர்கள் 17 வயது மகனை கிராம மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று வருவதாகவும், பாம்பு மந்திரவாதிகள் பரிந்துரைத்த மாற்று சிகிச்சைகளையும் செய்து வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“இந்த பாம்பு ஏன் யஷ்ராஜை குறிவைக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுவன் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டு பாம்பை பற்றிய பயத்தில் வாழ்கிறான். நாங்கள் பலமுறை ‘பூஜை’ செய்துள்ளோம், பாம்பைப் பிடிக்க பாம்பு மந்திரவாதிகளை அழைத்திருக்கிறோம், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, ” என சிறுவனது தந்தை கூறினார்
ALSO READ | டீக்கடை போட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர் .. காரணம் என்ன தெரியுமா..!!!