போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.8 மற்றும் 4.5 ரிக்டர் அளவிலான இரண்டு பூகம்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 2020) காலை தாக்கின.
நில அதிர்வுக்கான தேசிய மையத்தின்படி, காலை 10.31 மணிக்கு 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயருக்கு கிழக்கே 250 கி.மீ தொலைவில் இருந்தது. பூகம்பத்தின் ஆழம் 10 கி.மீ. என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.
ALSO READ | அயோத்தி ராமர் கோயில்: பூமி பூஜைக்கு பிரதமருக்கு அழைப்பு!!
போர்ட் பிளேருக்கு கிழக்கே காலை 11.07 மணிக்கு தீவில் 4.5 நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்பத்தின் ஆழம் 10 கி.மீ. ஆகும்.
எந்தவொரு உயிர் இழப்பு அல்லது சொத்து சேதங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4:55 மணிக்கு கத்ராவின் 88 கி.மீ. அதிர்வு பதிவாகியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.
ALSO READ | 'ஆரோக்கிய சேது' பயன்பாட்டின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு சாதனை
எனினும், பூகம்பத்தின் தீவிரம் குறைவாக இருப்பதால் எந்தவொரு உயிர் இழப்பு அல்லது சேதமும் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற நிலநடுக்கம் குஜராத்தில் ராஜ்கோட்டை காலை 7:40 மணிக்கு தாக்கியது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின்படி, பூகம்பத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ. ஆக பதிவு.