லக்னோவில் உள்ள பிரைட்லேண்ட் பள்ளியில் படித்து வந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் கழிவறையில் கத்தி குத்து காயங்களுடன் இருந்துள்ளான்.
இதுபற்றி மாணவனின் தந்தை கூறும்பொழுது, எனது மகன் காயமடைந்த தகவலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. அவனை 6-ம் வகுப்பு மாணவி கத்தியால் எனது மகனை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியவர் பற்றியும் மற்றும் அது மாணவி என்பது பற்றியும் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பள்ளி அதிகாரிகள், மாணவனின் உயிரிழப்புடன் நீல திமிங்கல விளையாட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Lucknow: Parents gather outside Brightland School in Triveni Nagar to stage a protest against the incident where a class 1 student was injured after allegedly being attacked with a knife inside school premises yesterday. pic.twitter.com/X2BZDwQ1wo
— ANI UP (@ANINewsUP) January 18, 2018
இதையடுத்து, அப்பள்ளியை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். எனவே அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.