புதுடெல்லி: பொதுப்பிரிவில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 16 அன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். தடை விதிக்கப்படுமா என்று அன்று தீர்மானிக்கப்படும்.
இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு கடந்த சனவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றபப்ட்டது. அடுத்த நாள் மாநிலங்களவையில் விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக ஏழு பேரும் வாக்களித்தனர். இதன்மூலம் இரு அவைகளிலும் 10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனையடுத்து, இந்த மசிதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்த மசோதாப்படி, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மற்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக வேளாண் நிலம் வைத்திருப்பவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர்களாக இருப்பார்கள்.
இடஒதுக்கீடு என்பது 50 சதவிதம் மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இந்த மசோதாவை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், 10% இட ஒதுக்கீடு மசோதாவை தடை செய்ய மறுத்துவிட்டது. இதுக்குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.