இந்தியா-பாக் போரில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள்; நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில், சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில், பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட ஆதரவும், பாகிஸ்தானுக்கு இருந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 1, 2022, 05:15 PM IST
  • பாகிஸ்தான் திடீரென்று, ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மேல், கடுமையான தாக்குதலை நடத்தியது.
  • இந்திய கைக்குள் இருந்த போர்களம், கையவிட்டு நழுவ ஆரம்பித்தது.
  • பாகிஸ்தானுக்கு உதவி செய்ய, இந்தியாவோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு போர் கப்பலும்,அணிவகுத்து வந்தது.
இந்தியா-பாக் போரில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள்; நேசக்கரம் நீட்டிய ரஷ்யா! title=

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில், சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில், பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட ஆதரவும், பாகிஸ்தானுக்கு இருந்தது. சோவியத் யூனியனும், முதலில் 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்' ன்ற அளவுக்கே அதை பார்த்தது. 

ஆனால், 1971 டிசம்பர் 3-ம் தேதி அன்று மாலை, இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான் திடீரென்று, ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மேல், கடுமையான தாக்குதலை நடத்தியது. 

உடனே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானுடன் போர் தொடங்கியது என்ற செய்தியை, நாட்டு மக்களுக்கு ரேடியோவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான சூழ்ந்து, மிகப்பெரிய தாக்குதல்கள ஆரம்பித்தன. 1971 டிசம்பர் 4-ம் தேதி  இரவு இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்தை சின்னபின்னமாக்கி, இந்திய எல்லையை அடைந்தது.  அப்போது கராச்சி துறைமுகத்தை பாதுகாக்க வந்த பாகிஸ்தான் போர்விமானங்கள், துறைமுகத்தில் நிற்பது தங்களோட போர் கப்பல் என்று கூட தெரியாமல், PNS ஜுல்பிஹர் என்ற தங்களோட ராணுவ கப்பலையே தாக்கி அழித்தது. 

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

திடீர்னு, நிறைய மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்க, அப்போது வரை இந்திய கைக்குள்ள இருந்த போர்களம், கையவிட்டு நழுவ ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவா இருந்தது நிலையில், அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன்,  ஜோர்டான், ஈரான், பிரான்ஸ், துருக்கி நாடுகளோட போர் விமானங்கள, பாகிஸ்தானில் நிறுத்தி  வைக்க சொல்லி உத்தரவிட்டார்.

மேலும், அமெரிக்க கடற்படையின் செவன்த் ப்ளீட் என்ற ராணுவ  பிரிவை ( 'செவன்த் ப்ளீட்' என்பது, 70 போர் கப்பல்கள், 300 போர் விமானங்கள், 40 ஆயிரம் வீரர்களை கொண்ட அமெரிக்க கடற்படையோட மிகப்பெரிய பிரிவு) பிரிட்டனோட கடற்படையோட சேர்ந்து, இந்திய நகரங்களை தாக்குறதுக்காக வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வைத்தார். மேலும்... தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி, சீனாவையும் அழைத்தார். 

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

அதோடு, USS Enterprise-ன்ற மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலையும், வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கப்பலோட சேர்ந்து, பிரிட்டனோட HMS Eagle-ன்ற மிகப்பெரிய போர் கப்பலும், பாகிஸ்தானுக்கு உதவி செய்ய, இந்தியாவோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு அணிவகுத்து வந்தது. 

உலகத்தோட பெரும்பாலான வல்லரசுகள், இந்தியா என்னும் ஒற்றை நாட்டுக்கு எதிரா 'சக்கர வியூகம்' வகுத்து, இந்தியாவை சுற்றி வளைச்சு நிக்குது. அப்பொழுது தான் உலகமே அதிரும்படியா ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த காலகட்டத்துல, அமெரிக்காவ நடுநடுங்க வெச்ச சோவியத் யூனியன்,  இந்தியாவுக்கு ஆதரவா போர்களத்துல களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு ஆதரவா நின்ற அத்தனை நாடுகளையும், "இந்தியா மேல துரும்பு பட்டாலும், நேரடியா உங்க நாடுகளை தாக்குவோம்" ன்னு எச்சரிச்சரிக்கை விடுத்தது.

கொஞ்சம் துள்ளிப் பார்த்த சீனாவை, "விலகிக்கோ... இல்லேன்னா உன்னோட 'சிங்கியாங்க்' (சீனாவோட மிகமுக்கியமான ராணுவதளம் உள்ள பகுதி) பகுதிய தவிடு பொடியாக்குவோம்"  என்று, நேரடியாகவே எச்சரித்தது. வேற எந்த நாட்டையும்விட, ரஷ்யாவோட ராணுவ பலத்தைப்பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குற சீனா, வம்பு ஏதும் வேண்டாம் என்று போர்களத்தை விட்டு விலகியது.  

அதுவரைக்கும் தனியாவே போராடின இந்தியா, சோவியத் துணைக்கு வந்த உற்சாகத்தில், பாகிஸ்தானோட பல பகுதிகளுக்குள்ள நேரடியா புகுந்து தரை மட்டமாக்கியது. சோவியத் சொன்னது மட்டுமில்லாமல், அதுவரைக்கும் உலகத்துக்கு காட்டாத தன்னோட நவீன போர்விமானங்கள், விமானம்தாங்கி போர்கப்பல்கள வங்காள விரிகுடாவுல இறக்கியது. முக்கியமாக, போர் களத்துலிருந்து அமெரிக்கா, பிரிட்டனை பின் வாங்கச்செய்ய, தன்னோட அணுநீர்மூழ்கி கப்பல்கள கொண்டுவந்து வங்காள விரிகுடாவில் நிறுத்தியது.

இந்தியாவுக்கு ஆதரவாக, வங்காள விரிகுடாவில் பெரிய அரண் அமைத்து நின்ற, சோவியத்தோட அணு நீர்மூழ்கிக் கப்பல்கள பார்த்த அமெரிக்க கப்பற்படை மிரண்டது. உடனடியா பிரிட்டனோட HMS Eagle-ஐ போர் களத்துலிருந்து மடை மாற்றி, மடகாஸ்கருக்கு அனுப்பிட்டாங்க. இப்படியே அமெரிக்கா உட்பட, பாகிஸ்தானிற்கு ஆதரவான ஒவ்வொரு நாடும் போர் களத்திலிருந்து பின்வாங்கியது.  பாகிஸ்தானால், தனியா இந்தியாவ சமாளிக்க முடியாமல், 13-நாள் போர் முடிவுக்கு வந்து, பாகிஸ்தான் தன் 90 ஆயிரம் ராணுவ வீரர்களோட, இந்தியாவிடம் சரணடைந்தது. பங்களாதேஷ் என்ற தேசம் மலர்ந்தது. 

நமது நாட்டின் மோசமான காலகட்டத்தில், நமக்கு துணையா நின்ன ஒரேநாடு சோவியத் யூனியன்தான். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவை, இந்தியாவின் உற்ற நண்பன் என சொல்கிறோம். 

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News