தோனியின் கையுறைகள் வரிசையில் மத்தியில் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஒற்றுமையை காட்டிய ஸ்மிருதி இரானி!
2-வது உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதின, இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் விக்கெட் கீப்பருமான தோனி அணிந்திருந்த கையுறையில் இந்திய ராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவின் பாலிதான் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தோனி அணிந்திருந்த கையுறையில் பொறிக்கப்பட்டிறிந்த சின்னத்தை அகற்றுமாறு ICC இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் பலரும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரும் தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஸ் ரெய்னாவும் பாஜாகவின் மூத்த தலைவர் சுப்ப்ரமணிய சுவாமியும் தங்கள் ஆதரவை தோனிக்கு தெரிவித்துள்ளனர். மேலும், பலரும் தங்கள் ஆதரவை #DhoniTheGlove என்ற ஹேஸ்டேகில் தங்களது ஆதரவை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோனியின் கையுறை விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ளார் இண்ஸ்டகிராம் பதிவில்; நீங்கள் எங்களை ஒருபோதும் கண்டுகொள்ளாதீர்கள், நீங்கள் எதைப் பற்றியும் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், நீங்கள் அதை செய்ய முடியாது. ஆண்கள் தவிர, ஒவ்வொரு மனிதனும் ஒரு பேரரசர்" என அவர் பதிவிட்டுள்ளார்.
ஐசிசியின் உத்தரவுக்கு தோனி பனிவாரா இல்லையா என்பதை இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.