கரன்ஸி விவகாரம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Last Updated : Nov 15, 2016, 02:46 PM IST
கரன்ஸி விவகாரம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு title=

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பு விவாகரத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

இன்று உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு எதிரான பொது நல வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து உள்ளது. 

தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில் இன்று மதியம் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது என கூறியதுடன், ரூபாய் நோட்டு குறித்த அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மத்திய அரசும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும்போது, தங்களது வாதத்தை கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்கு மக்கள் சென்று மாற்றி வருகின்றன.

Trending News