Uttar Pradesh BY-Election News: லோக்சபா தேர்தலுக்கு பின், தற்போது, உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மீது அனைவரின் கவனம் திரும்பியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 10 இடங்களுக்கான இடைத்தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமாஜ்வாதி 7, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடலாம்
உத்தர பிரதேசம் மாநில இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜூலை 21 ஆம் தேதி லக்னோவில் அக்கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்களின் கூட்டத்துக்கும் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள் தொடர்பாக விவாதம் நடத்தலாம் எனத் தெரிகிறது.
உ.பி.யில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
உ.பி.யில் உள்ளல கதேஹாரி, குந்தர்கி, காசியாபாத், கர்ஹால், மில்கிபூர், கெய்ர், மிராபூர், புல்பூர், மஞ்ச்வா மற்றும் சிசாமாவ் ஆகிய 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக இதில் 5 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி இருந்தது. பாஜகவுக்கு 3 இடங்களும், ஆர்எல்டி-நிஷாத் கட்சிக்கு தலா ஒரு இடமும் இருந்தது.
இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் எம்எல்ஏக்களா இருந்தவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனதால், 9 இடங்கள் காலியாகியுள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் சோதனை
உத்தர பிரதேசம் மாநில இடைத்தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் சோதனையாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கடும் பின்னடவை சந்தித்தது. 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. உ.பி. தோல்விக்கு காரணம் யோகி ஆதித்யநாத் என பாஜகவினர் குரல் எழுப்பினர். இந்நிலையில், ஆளும் கட்சியான பாஜக இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் அற்புதம் செய்த சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி
சமாஜவாதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிசயங்களைச் செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 43 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. அதேசமயம் சமாஜ்வாதி கட்சி தனித்து 37 இடங்களில் வெற்றி பெற்றது. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெறும் 36 இடங்களே கிடைத்தன. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு தனித்து பெரும்பான்மையை பெறாததற்கு காரணம் உ.பி.யின் தோல்வி முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இடைத்தேர்தலில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ