தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து உயர் நீதி மன்றத்தை அணுகும் சச்சின் பைலட்

சட்ட மன்ற கட்சிக் கூட்டத்தை தவிர்த்ததற்காக சபாநாயகர் ஜோஷி புதன்கிழமை அன்று பைலட் மற்றும் பிற 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Last Updated : Jul 16, 2020, 04:53 PM IST
  • சட்டமன்ற சபாநாயகர் சி.பி.ஜோஷி வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸை எதித்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
  • இந்த விவகாரத்தை மாலை 3 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்.
  • முன்னதாக, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சபாநாயகர் ஜோஷி பைலட் மற்றும் பிற 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து உயர் நீதி மன்றத்தை அணுகும் சச்சின் பைலட் title=

சட்டமன்ற சபாநாயகர் வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

 சட்டமன்ற சபாநாயகர் சி.பி.ஜோஷி வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் வியாழக்கிழமை (ஜூலை 16) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

ALSO READ | Kulbhushan Jadhav-வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும்: வெளியுறவுத் துறை

இந்த விவகாரத்தை மாலை 3 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சபாநாயகர் ஜோஷி புதன்கிழமை (ஜூலை 15) பைலட் மற்றும் பிற 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். சட்டமன்ற சபாநாயகர் சி.பி.ஜோஷி வழங்கிய தகுதி நீக்க நோட்டீஸைஎதிர்த்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் வியாழக்கிழமை (ஜூலை 16) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த விவகாரத்தை மாலை 3 மணிக்கு ராஜஸ்தான்  உயர் நீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் ஜோஷி புதன்கிழமை (ஜூலை 15) சச்சின் பைலட் மற்றும் பிற 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக நோட்டீஸ் அனுப்பினார்.

ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்

ராஜஸ்தானில் காங்கிரஸின் தலைமைக் கொறடாவான டாக்டர் மகேஷ் ஜோஷி சமர்ப்பித்த மனுவில்,  அரசியலமைப்பின் 191 வது பிரிவு மற்றும் 10 வது ஷெட்யூலின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பபட்டதாக கூறப்பட்டது. சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷியின் அறையில் ஜூலை 17 ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ள  நடவடிக்கையில், சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் அதிகாரப்பூர்வ இல்லங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 மேலும் ஜூலை 17 க்குள் இந்த நோட்டீஸுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காகவும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் இரண்டு கூட்டங்களை தவித்தனர் என்பதற்காகவும் செவ்வாயன்று ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்தும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதன் பின்னர், சச்சின் பைலட், சத்தியத்திற்கு சோதனை ஏற்படலாம் ஆனால், தோற்கடிக்க முடியாத என ட்வீட் செய்திருந்தார். 

பைலட் இன்னும் காங்கிரஸில் இருந்து விலகவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் புதன்கிழமை (ஜூலை 15) தான் பாஜகவில் சேரத் திட்டமிடவில்லை என்றும்,  அவதூறு செய்வதற்காக வேண்டும் என்றே இந்த செய்தி  பரப்பப்படுகிறது என்றும் கூறினார்.

Trending News