ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியான் இன்டர்நேஷ்னல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாவலர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பள்ளியில் அமைந்துள்ள கழிவறைப் பகுதி வெளியாட்களும் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் பள்ளி உரிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி செயல்படக் கூடாது என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் முழுமையாக கட்டி முடிக்கப்படாத சுற்றுச்சுவர், காலாவதியான தீயணைப்பு உபகரணங்கள், முறையாக பொருத்தப்படாத சிசிடிவி கேமராக்கள், உரிய விசாரணை நடத்தப்படாத ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் என அப்பள்ளியின் குறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் பள்ளி மற்றும் அதன் உரிமையாளர் மீது ஜூவனில் ஜஸ்டிஸ் சட்டத்தின் படி, கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா, சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின் தொடர உத்தரவிட்டார்.
இதன் விசாரணையை 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரியான் பள்ளிக்கு முன்பு, பொதுமக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளி அனைத்து வளாகங்களில் செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டுஉள்ளதாக அறிக்கை கொடுக்கப்படுள்ளது.