7 December 2018, 05:00 PM
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: மாலை 0 5:00 மணி நிலவரப்படி 72.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
7 December 2018, 03:00 PM
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: மாலை 03:00 மணி நிலவரப்படி 56.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
7 December 2018, 09:55 AM
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9.00 மணி நிலவரப்படி 6.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
Voting turnout in #RajasthanAssemblyelection2018 is 6.11% till 9 AM.
— ANI (@ANI) December 7, 2018
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.....
ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இந்த 5 மாநில தேர்தலின் முடிவும் வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
சுமார் 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Rajasthan: Mock polling being conducted at booth no. 106 in Jodhpur's Sardarpura constituency. Voting will begin at 8 am in the state. #RajasthanElections2018 pic.twitter.com/WSRE6AYa6s
— ANI (@ANI) December 7, 2018
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 51ஆயிரத்து 687 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களைத் தடுக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலப் பேரவைத் தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.