ராஜஸ்தான் பாஜகவில் குழப்பமா? அடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் விலகல்

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான அரசபையில் இடம்பெற்றிருந்த மூன்று பாஜக எம்எல்ஏக்கள் விலகல் விலகியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 09:26 PM IST
ராஜஸ்தான் பாஜகவில் குழப்பமா? அடுத்தடுத்து 3 எம்எல்ஏக்கள் விலகல் title=

கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் உள்பட சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் அடுத்த மாதம் டிசம்பர் 7 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை அதே மாதத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலை வெளியிட்டதில் இருந்து, பா.ஜ.க கட்சியில் ராஜினாமா முடிவு துவங்கியுள்ளது. பல தலைவர்கள் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மூன்று எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினமா கடித்ததை அளித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ. கட்சியை சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சுரேந்தர் கோயல், ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர் மதன்லால் சாய்னிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். 

இதுக்குறித்து சுரேந்தர் கோயல் கூறுகையில், வரும் தேர்தலில் ஜெய்தரன் தொகுதியிலில் சுயேச்சையாக போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். நாகௌர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹபிபுர் ரஹ்மான் பாஜக கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் எனத் தெரிகிறது. பிஜேபி முன்னாள் பொதுச் செயலாளர் குல்தீப் தேர்தலில் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறி கடந்த திங்கள்கிழமை கட்சியை விட்டு வெளியேறினார். 

அதேபோல சுகாதார அமைச்சர் காளி ஃபூல் சாராப், போக்குவரத்து அமைச்சர் யுனெஸ் கான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜ்பால் சிங் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் முதல் வேட்பாளர்கள் பட்டியலில் இல்லை. இதனால் இவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என கூறப்படுகிறது. 

இதுக்குறித்து பா.ஜ.க. தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறுகையில், கட்சியில் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடுகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். முழு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட பிறகு, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறினார்.

Trending News