மக்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கும் ஒரு முன் முயற்சியில், நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் பாதையில், இந்தியல் ரயில்வே ஜூன் 1 முதல் 200 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்கும் என்று தேசிய ரயில் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாத இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் இருக்கும் எனவும், இந்த ரயில்கள் தினமும் இயங்கும் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த ரயில்களின் கட்டணம் குறைந்த ஸ்லீப்பர் கட்டணமாக இருக்கும், மேலும் இது அனைத்து வகை மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களை இணைக்கும் ராஜதானி வழித்தடங்களில் தற்போது இயக்கப்படும் ஷ்ராமிக் ஸ்பெஷல் மற்றும் குளிரூட்டப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு கூடுதலாக இந்த 200 ரயில்களும் இயக்கப்படும். அனைத்து வகை பயணிகளும் ஆன்லைனில் கிடைக்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பான அறிவிப்பில் "இந்திய ரயில்வே ஜூன் 1 முதல் தினசரி 200 AC-அல்லாத ரயில்களை இயக்கவுள்ளது, அதன் ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும்" என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.
எனினும், இந்த ரயில்கள் எந்த வழிகளில் இயக்கப்படும் என்பதை ரயில்வே இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை இந்த ரயில்கள் இணைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, ரயில்வே தனது வழக்கமான பயணிகள் சேவைகளை சமீபத்தில் துவங்கி அடுத்த இரு தினங்களில் நிறுத்தியது. அதாவது, ஜூன் 30 வரை ரயில் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த 200 ரயில்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஏற முடியாவிட்டால், இந்த ரயில்களைப் பெறக்கூடிய புலம்பெயர்ந்தோருக்கும் உதவியாக இருக்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
"அவர்கள் (புலம்பெயர்ந்தோர்) ரயில்வே ஸ்டேஷன் ஹெட் முதல் மெயின்லைனில் ரயில்களில் ஏறக்கூடிய வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும், இது அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் அவர்களை கொண்டு சேர்க்கும்" என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க இலக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறிய தேசிய போக்குவரத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என்றும், வரும் நாட்களில் சேவை ரயில்களின் எண்ணிக்கையினை இரட்டிப்பாக்குவதன் மூலம் "விரைவாக" அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் உறுதியளித்தது.
சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில், அருகிலுள்ள மாவட்ட தலைமையகத்தில் பதிவுசெய்த பின்னர் அவர்களை அருகிலுள்ள பிரதான ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லவும் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த பயணிகளின் பட்டியலை ரயில்வே அதிகாரிகளுக்கு வழங்குமாறு மாநிலங்களை அது கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் மேலும் பயணிக்க ஷ்ராமிக் ஸ்பெஷல்கள் மூலம் ஏற்பாடுகள் செய்ய முடியும்.
"அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்திய ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 400-ஆக உயர்த்தும். குடியேறியவர்கள் அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அடுத்த சில நாட்களில் இந்திய ரயில்வே அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்" என்று கோயல் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 19 நாட்களில் 21.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே செவ்வாய்க்கிழமை வரை 1600 க்கும் மேற்பட்ட 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்களை இயக்கியுள்ளது எனவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.