Video: மோடியை மெய்சிலிர்க்க வைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்!

ராஷ்ட்ரபதி பவனில் கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 23, 2018, 11:55 AM IST
Video: மோடியை மெய்சிலிர்க்க வைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்! title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், குறிப்பாக அவரின் குழந்தைகளான சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியெனை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில் கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 

 

Trending News