சுதந்திர தின உரையில் "நீரின்றி அமையாது உலகு" என தமிழில் பேசிய பிரதமர் மோடி

மழைநீர் சேகரிப்பின் முக்கித்துவத்தை உணர்ந்து மத்திய அரசு செயல்படுகிறது என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 15, 2019, 08:56 AM IST
சுதந்திர தின உரையில் "நீரின்றி அமையாது உலகு" என தமிழில் பேசிய பிரதமர் மோடி title=

புதுடெல்லி: நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான அரரின் பிரதமர் மோடி தொடர்ந்து 6-வது தடவையாக மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றி வருகிறார்

தனது சுதந்திர தின உரையில் பல விசியங்களை குறித்து பேசி வருகிறார். அப்பொழுது மழைநீர் சேகரிப்பின் முக்கித்துவத்தை உணர்ந்து, எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தனது சுதந்திர தின உரையில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி "நீரின்றி அமையாது உலகு" என தமிழில் பேசினார் மோடி. மேலும் பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது எனவும் கூறினார். மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. மழைநீர் சேகரிப்பின் முக்கித்துவத்தை உணர்ந்து, எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது எனவும், அதற்காக தான் "ஜல் சக்தி" என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

மத்திய அரசாங்கம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியது. இது இந்த அரசின் மிகப்பெரிய சாதனை ஆகும். சர்தார் படேலின் கனவை நிறைவேற்றி உள்ளோம். 70 ஆண்டுகளில் செய்யப்படாத பணிகள் 70 நாட்களில் நிறைவு செய்யப்பட்டன. நாங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்க்கான வழிகளை எற்ப்படுத்தி வருகிறோம். அதை மூடிமறைக்க விரும்பவில்லை. முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், முஸ்லிம் பெண்கள் கண்ணீரைத் துடைத்துள்ளோம். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் கொடுத்த வேலைகளை செய்தான், நான் இங்கு வந்தேன். எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 வாரத்தில் நாடு தடையில்லா வளர்ச்சியை கண்டிருக்கிறது.

இன்றைக்கு நாங்கள் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இது மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. எங்களால்தான் நாட்டை சிறப்பாக முன்னேற்ற முடியும் என்று மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர் எனப் பேசினார்.

Trending News