Gyanvapi: மதுரா & வாரணாசி மசூதிகளுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்! கோரிக்கையால் வந்த வினை!

Islamic Cleric Detained: மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கிருஷ்ணர் கேட்டார். ஆனால், தற்போது இந்து சமுதாயம் மூன்று இடங்களை மட்டுமே கோருகிறது!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2024, 10:21 PM IST
  • ஞானவாபி மசூதி பிரச்சனையும் நீதிமன்ற தீர்ப்பு
  • முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கை
  • ஷாஹி இத்கா மசூதிக்கு யாருக்கு?
Gyanvapi: மதுரா & வாரணாசி மசூதிகளுக்கு உரிமை கொண்டாட வேண்டாம்! கோரிக்கையால் வந்த வினை! title=

Gyanvapi mosque And Jail Baro Andholan: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறை நிரப்பு போரட்டத்திற்கு இஸ்லாமிய மதகுரு அழைப்பு விடுத்ததை அடுத்து, மாநிலத்தில் பதற்றம் அதிகரிக்கிறது. மௌலானா தவுக்கீர் ராசாவின் சிறை நிரப்பு போராட்டமான ‘Jail Bharo’ போராட்டத்தினால் பரேலியில் பதற்றம் அதிகரித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று பரேலியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ரசா கானின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதும் தெரிகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 1000 போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக இஸ்லாமிய மதகுருவும் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌக்கீர் ரசா கானின் ஆதரவாளர்கள் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதனை அடுத்து, அங்கு வகுப்புவாத கலவரம் மூளும் நிலை ஏற்பட்டதால், உத்தரப் பிரதேச போலீசார் மௌலானா தவுக்கீர் ராசாவை கைது செய்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

பரேலி மட்டுமல்ல, மாநிலம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் வீதிகளில் திரண்டு முதலமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதிக்கு உரிமை கொண்டாடுவதை இஸ்லாமியர்கள் கைவிட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் கூறியதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

மேலும் படிக்க | ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி... நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கூடிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி கோஷமிடத் தொடங்கியதை அடுத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்க 1000 போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். பரேலியின் அனைத்து முக்கிய சந்திப்புகள், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் நகரத்திற்குள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மாவட்டத்தில், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 12 வட்ட அலுவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த களத்திற்கு வந்துவிட்டனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வியாழன் மாலை ஹல்த்வானியில் வகுப்புவாத மோதல்கள் நடந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லையில் பரேலி அமைந்துள்ளது.
 
ஹல்த்வானி சம்பவம் குறித்து ரசா கான் கருத்து
ஹல்த்வானி சம்பவம் குறித்து பேசிய ரசா கான், 'அரசாங்கம் வன்முறையை விரும்பினால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். காவல்துறைக்கும், தோட்டாக்களுக்கும் நாங்கள் பயப்படுவதில்லை. அரசு புல்டோசர்களை மதரஸாக்கள் மீது ஏவிவிடுகிறது. இதுபோன்ற விஷயங்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கும் அரசாங்கத்தின் அழுத்தம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

'நம்மை நாமே பாதுகாப்போம். நம்மைத் தாக்கும் எவரையும் கொல்லும் உரிமையை சட்டம் நமக்கு வழங்கியுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் யோகி ஆதித்யநாத் கூறியது என்ன?
உத்தரப்பிரதேச சட்டசபையில் அண்மையில் (பிப்ரவரி 7, புதன்கிழமை) பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சர்ச்சைக்குரிய ஞானவாபி மற்றும் ஷாஹி இத்கா மசூதி பற்றி குறிப்பிட்டார். மகாபாரதத்திலிருந்து கிருஷ்ணர் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டிய அவர், ’மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கிருஷ்ணர் கேட்டார். ஆனால், தற்போது இந்து சமுதாயம் மூன்று இடங்களை மட்டுமே கோருகிறது’ என்று கூறி, மதுரா மற்றும் வாரணாசி மசூதிகளை பற்றி பேசினார்.

மேலும் படிக்க |  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News