ஆந்திரா உள்நுழைய மோடிக்கு உரிமை இல்லை - சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் அம்மாநிலத்திற்குள் நுழைய பிரதமர் மோடி-க்கு  உரிமை இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்!

Last Updated : Feb 23, 2019, 04:07 PM IST
ஆந்திரா உள்நுழைய மோடிக்கு உரிமை இல்லை - சந்திரபாபு நாயுடு! title=

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் அம்மாநிலத்திற்குள் நுழைய பிரதமர் மோடி-க்கு  உரிமை இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளிடம் காணொளி காட்சி மூலம் உரையாடினார். இந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது...

கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, பிரிவினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது. 

அதன்படி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 

இதனையடுத்து ஆளும் பாஜக அரசிற்கு எதிராக ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வரும் வண்ணமாக உள்ளது. இந்நிலையில் தற்போது தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆந்திராவுக்குள் நுழைய பிரதமர் மோடிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி அதனை செய்யாததற்கு குறுகிய அரசியல் நோக்கமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது மக்களவைக்காக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடுமுழுவதும் நடைப்பெற்று வரும் நிலையில் சமீபத்தில் திருப்பதி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்தியில் ஆட்சியமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். 

Trending News