வாக்கு அரசியல் செய்யும் ஆட்சியல்ல, வளர்ச்சி அரசியல் செய்யும் ஆட்சி: பிரதமர் மோடி

அரசு வாக்கு அரசியலை மனதில் வைத்துக் கொண்டு வாக்குகளை கவருவதற்காக,  புதிய திட்டங்களை கொண்டு வருவதில்லை என்றும், ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 03:53 PM IST
  • அரசு வாக்கு அரசியலை மனதில் வைத்துக் கொண்டு வாக்குகளை கவருவதற்காக, புதிய திட்டங்களை கொண்டு வருவதில்லை என்றும், ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டர்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் லஹோல்-ஸ்பிதி பிராந்தியத்தின் சிசு கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கூறினார்.
  • ரோஹ்தாங்கில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து வானிலையிலும் இயங்கும் அடல் சுரங்கப்பாதையை மோடி திறந்து வைத்தார்.
வாக்கு அரசியல் செய்யும் ஆட்சியல்ல, வளர்ச்சி அரசியல் செய்யும் ஆட்சி: பிரதமர் மோடி title=

இமாச்சல பிரதேசத்தின் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) , காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள், பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொள்ளாமல்,  பல ஆண்டுகளாக சமரசம் செய்து வந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றம் உள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு வாக்கு அரசியலை மனதில் வைத்துக் கொண்டு வாக்குகளை கவருவதற்காக,  புதிய திட்டங்களை கொண்டு வருவதில்லை என்றும், ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டர்.

இமாச்சலப் பிரதேசத்தின் லஹோல்-ஸ்பிதி பிராந்தியத்தின் சிசு கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கூறினார். 

தலித்துகள், பின்தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள், போன்று அடிதட்டு மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அடல் சுரங்கம் இந்த பிராந்தியத்தின் இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை கொடுக்கும், என்றார்.

இதனால், இந்த பகுதி மேம்பாடு, ஹோம் ஸ்டே ஹோட்டல் போன்றவை அதிகரித்து , இளைஞர்களுக்கு சுற்றுலா மேம்பாட்டின் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார். 

முன்னதாக ரோஹ்தாங்கில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து வானிலையிலும் இயங்கும் அடல் சுரங்கப்பாதையை மோடி திறந்து வைத்தார். 

எல்லை சாலை அமைப்பால் கட்டப்பட்ட அடல் சுரங்கப்பாதை, உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும், மேலும் மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ. குறைவதோடு, இது பயண நேரத்தையும்
 நான்கைந்து மணி நேரம் குறைக்கிறது.

மேலும் படிக்க | அடலின் கனவு நிறைவேறியது: மணாலி சுரங்க பாதையை திறைந்து வைத்த PM Modi

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News