பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா முழுவதும் கட்டிய கொண்டாட்டங்கள்!!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், இடத்தை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இந்த நிலையில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. 12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன.
இதையடுத்து, இந்த பதில் தாக்குதலுக்கு பவேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பல்வேறு முகாம்களில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் ஏராளமானவர்கள் ஒன்று கூடி வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கொல்கத்தாவில் ராணுவ முகாம் முன் திரண்ட பொதுமக்கள் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
#WATCH People seen dancing at Attari-Wagah border earlier today. pic.twitter.com/Fs6aJL0sHF
— ANI (@ANI) February 26, 2019
மேலும், நாடுமுழுவதிலும் உள்ள மக்கள் இந்த பதில் தாக்குதலை பாராட்டி தேசிய கொடியுடன், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாரத் மாதாகீ ஜெய் என்ற முழக்கங்களுடன் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முபையில் உள்ள காட்கோபர் பகுதியில் உள்ள இளைங்கர்கள் உச்சக மிகுதியில் பட்டாசுகள் வெடித்து "வந்தே மாதரம்" என்ற கோசங்களை எழுப்பினர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.