பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவை -சரத் பவார்!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமெனில், புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 21, 2019, 02:29 PM IST
பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவை -சரத் பவார்! title=

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமெனில், புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில், அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று, இம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியினை அறிவித்தார். தேர்தல் ஆணைய அறிவிப்பினை அடுத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா வலிமைமிக்கவர், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும், புல்வாமா போன்ற தாக்குதலால் மட்டுமே பாஜக-விற்கு சாதகமான முடிவை தேடி தரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது., மகாராஷ்டிராவில் மக்கள் கோபப்படுவது பாஜகவின் வருங்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் CRPF ஊழியர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நிலவியதைப் போன்ற ஒரு நிலை ஆளும் கூட்டணிக்கு உதவக்கூடும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பரிந்துரைத்தார்.

வரவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தல்கள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசிய பவார், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில், இதனை ​​காங்கிரஸ் எதிர்த்தது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை குறிவைத்து, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக-சிவசேனா அரசாங்கத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டிய பவார், சமீபத்திய வழக்கு ஒன்றிலை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும் பவார் விட்டுவைக்கவில்லை., மத்திய அரசு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பவாரின் கூற்றுப்படி, இதுபோன்ற ஏஜென்சிகளைப் பற்றி மக்கள் கூட அறிந்திருக்கவில்லை, ஆனால் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அனைத்து துறையினை பற்றியும் அறிந்துக்கொள்ள துவங்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.

Trending News