தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இடங்கள் மற்றும் அதன் இணைப்புகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்தியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் மீது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் முகாம்களை நடத்துவது வழக்கில், ED மற்றும் NIA மாநில போலீஸ் படைகளுடன் இணைந்து உ.பி., கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர், பயிற்சி முகாம்களை நடத்துவது மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை தீவிரப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் குடியிருப்பு மற்றும் உத்தியோகபூர்வ வளாகங்களில் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை, கடலூர், மதுரை, திண்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பயாஸ்அகமது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்ககு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசிப் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை
கோவையில் கரும்பு கடையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தனர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர் இதன் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டும் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது பாதுகாப்பிற்காக crpf போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரு உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
10 மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்கள் கைது
உள்துறை அமைச்சக வட்டாரங்களின்படி, கேரளா உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) 50 இடங்களில் NIA மற்றும் ED சோதனைகள் நடந்து வருகின்றன, இதுவரை 100 க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். PFI தலைவர்கள் மற்றும் இந்த அமைப்புடன் தொடர்புடைய அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்படுகிறது. என்ஐஏவுடன் இடியும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
NIA, ED arrest over 100 Popular Front leaders in raids across 10 states
Read @ANI Story | https://t.co/B0pUKvrUps#NIA #ED #PFI #NIARaids #EDRaids pic.twitter.com/JfVeLy0Ul2
— ANI Digital (@ani_digital) September 22, 2022
Tamil Nadu | NIA officials are conducting raids at the Popular Front of India (PFI) party office in Dindigul district.
More than 50 members of the PFI are protesting outside the party office against the NIA raid. pic.twitter.com/9jvCOEeZpp
— ANI (@ANI) September 22, 2022
Karnataka Police detained PFI and SDPI workers protesting against NIA raid in Mangaluru https://t.co/UB1PMTkP82 pic.twitter.com/70Fy4BQZOc
— ANI (@ANI) September 22, 2022
Thiruvananthapuram, Kerala | Four PFI leaders taken into custody by NIA; ED raid completed at PFI offices & leaders' residences.
PFI chairman OMA Salam, Kerala state chief CP Mohammed Basheer, national secy VP Nazarudheen & national council member Prof P Koya taken into custody. https://t.co/ofDeGlNMJH
— ANI (@ANI) September 22, 2022
NIA is conducting searches at locations linked to PFI across 10 states including Tamil Nadu, Kerala, Karnataka, Assam.
NIA, ED along with state police have arrested more than 100 cadres of PFI.
— ANI (@ANI) September 22, 2022
Tamil Nadu | NIA is conducting searches at 8 places in the Madurai city area including Villapuram, Gomatipuram, and Kulamangalam. pic.twitter.com/WxKihAMayW
— ANI (@ANI) September 22, 2022
செப்டம்பர் 18ஆம் தேதி 23 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது
முன்னதாக செப்டம்பர் 18 ஆம் தேதி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கராத்தே பயிற்சி மையம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்ட 23 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தியது. நிஜாமாபாத், கர்னூல், குண்டூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த இடங்களில் தீவிரவாத செயல்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8,31,500 ரொக்கம் உள்ளிட்ட குற்றச் சாட்டுப் பொருட்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைப்பற்றியது. என்ஐஏவின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளிப்பதற்காக முகாம்களை ஏற்பாடு செய்திருந்தனர் மற்றும் மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கின்றனர் என்றனர்.
மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ