- பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்த நாளான இன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பலர் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- ஸ்ரீநகரின் பட்மாலூவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகளும், பெண் ஒருவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த மோதலில் CRPF கமாண்டன்ட் ஒருவரும் படைவீரஇருவரும் காயமடைந்தனர்.
- நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எந்த சமரசமும் இருக்காது; சீனா வேண்டுமென்றே நிலைமையை மாற்ற முயற்சித்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார். நமது ஆயுதப்படைகளுக்கு மாநிலங்களவை ஆதரவளிக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
- இந்தியாவில் கோவிட் 19 நோயிலிருந்து 40,25,079 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 82,719 பேர் குணமடைந்துள்ளனர், மீட்பு விகிதம் 78.64% என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 11,36,613 பரிசோதனைகள் நாட்டில் நடத்தப்பட்டன. இதுவரை நாட்டில் 6 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
- தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு திரும்பினார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
- வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை 14.12 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- செங்கடல், ஏடன் வளைகுடா, ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடல் விளிம்பின் தீவு நாடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் தொடர்பான விஷயங்களை கையாளும் 18 உறுப்பு நாடுகளின் குழுவான Djibouti Code of Conduct/ Jeddah Amendmentஇல் இந்தியா ஒரு பார்வையாளராக இணைந்துள்ளது.
- காணொளி மூலம் நடைபெற்ற G20 சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டத்திற்கு செளதி அரேபியா தலைமை தாங்கியது. இந்தியாவின் வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். மேம்பட்ட உலகத்தை உருவாக்குவதற்காக G20 நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.
Also Read | இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் அதிசயம்! காரணம் தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR