என் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். #MeToo விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், எம்.ஜே.அக்பருடன் பணியாற்றிய 10-க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டுளின் உண்மை தன்மை ஆராயப்படும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
#WATCH Delhi:Union Minister MJ Akbar returns to India amid accusations of sexual harassment against him, says, "there will be a statement later on." pic.twitter.com/ozI0ARBSz4
— ANI (@ANI) October 14, 2018
இந்நிலையில் நைஜிரியா பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார். இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் #MeToo மூலம் என் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.