72 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்: MEA

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் ​​தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2020, 09:00 PM IST
72 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்: MEA title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமையான இன்று (ஏப்ரல் 30) ​​தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினையும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூக மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார். 

மேலும் பேசிய அவர், மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஊரடங்கு முடிந்ததும் வளைகுடா மற்றும் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை வெளியேற்றுவதற்காக கடற்படை கப்பல்களுக்கு, இராணுவ மற்றும் வணிக விமானங்களை அனுப்புவது குறித்து ஒரு முக்கிய திட்டத்தில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறினார்.

இருப்பினும், கோவிட் -19 ஐ சோதிக்க இரண்டு சீன நிறுவனங்கள் வழங்கிய விரைவான சோதனை கருவிகளைப் பயன் படுத்துவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்- ICMR) தடை குறித்து சீனா விமர்சித்ததைப் பற்றி கேட்டபோது, ​​வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர் மருத்துவ அமைப்பு இந்த விஷயத்தை கவனிக்கிறது எனக்கூறினார்.

 

குறிப்பிடத்தக்க வகையில், திங்களன்று (ஏப்ரல் 27), ஐ.சி.எம்.ஆர் இரண்டு சீன நிறுவனங்களான குவான்ஜு வாண்டஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லைவ்ஸோன் ஆகியவற்றிலிருந்து வாங்கிய சோதனைக் கருவியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. ஏனெனில் அதன் செயல்திறன் சரியானதாக இல்லை.

20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் 1.9 மில்லியன் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கியதாக ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். கூடுதலாக, சுமார் 87 நாடுகள் வணிக அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் ஆகியவற்றை வழங்கப்படும் என்றார். 

 

Trending News