இடைதேர்தல் அறிவிப்பு; மம்தா பானர்ஜி பபானிபூரில் போட்டியிடக் கூடும் என தகவல்

இந்திய தேர்தல் ஆணையம், மேற்கு வங்காளத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2021, 04:42 PM IST
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது மம்தா நந்திகிராமில் போட்டியிட்டார்
  • பாஜக சார்பாக போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் தோற்றார்.
  • இந்தியா முழுவதும் உள்ள மற்ற 31 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடைதேர்தல் அறிவிப்பு; மம்தா பானர்ஜி பபானிபூரில் போட்டியிடக் கூடும் என தகவல் title=

புதுடெல்லி: முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிட விரும்பும் செப்டம்பர் 30 ஆம் தேதி பபானிபூர் சட்டமன்றத் தொகுதியில் (மேற்கு வங்கம்) இடைத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (செப்டம்பர் 4) அன்று ஒடிசாவின் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும், மேற்கு வங்கத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்துவதாக அறிவித்தது.

மேற்கு வங்கத்தின் பபானிபூர் தவிர சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் தொகுதியிலும், ஒடிஷாவின் பிப்லி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறும். அக்டோபர் 3 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதனால்,  மம்தா பானர்ஜிக்கு (Mamata Banerjee) மாநில சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது மம்தா தனது பாரம்பரிய பபானிபூர் தொகுதியில் இல்லாமல், நந்திகிராமில் போட்டியிட்டார். ஆனால் திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். அவரது முன்னாள் நெருங்கிய உதவியாளர் சுவேந்து அதிகாரியிடம், முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ 2,000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

சுவேந்து அதிகாரி இப்போது மேற்கு வங்க சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். மேற்கு வங்கத்தின் பபானிபூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ | West Bengal Election Result: கடும் போராட்டத்திற்கு மத்தியில் மம்தா பானர்ஜி தோல்வி!

"மற்ற 31 சட்டமன்றத் தொகுதிகளிலும், மூன்று பாராளுமன்றத் தொகுதிகளிலும் (இந்தியா முழுவதும்) இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்று ஆணையம் முடிவு செய்துள்ள போதிலும், மேற்குவங்க மாநிலத்தின் நிர்வாக தேவையை கருத்தில் கொண்டு,  பபானிபூரில் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. 

ALSO READ | Covishield: 84 நாள் இடைவெளி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News