நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பாப்புகள் அதிகரித்து வரும் நிலையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு இந்திய பங்கு சந்தை முறையீட்டு வாரியத்திடம் (SEBI) விண்ணப்பித்துள்ளது.
சுமார் 5% பங்குகளை, அதாவது சுமார் 31.6 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ₹78,000 கோடியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மார்ச் மாதத்தில் பொது பங்கு வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், ஏற்கனவே இதற்கான அனுமதியினை IRDAI அனுமதி கொடுத்துள்ளது. 65 ஆண்டுகள் பழமையான எல்ஐசி நிறுவனத்தில் மொத்த பங்குகள் 632 கோடி ஆகும்.
மேலும் படிக்க | Budget 2022 விரைவில் வருகிறது LIC IPO: நிர்மலா சீதாராமன்
பங்குகளின் ஒரு பகுதி ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும், தகுதியான பாலிசிதாரர்களுக்கு 10 சதவீதத்திற்கு மிகாமல் மற்றொரு பகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றன. மேலும் இவர்களுக்கு 5% தள்ளுபடி சலுகை வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொது பங்கு வெளியிட் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பங்கு விலை குறித்து முடிவு செய்யப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையுடன் ஒப்பிடும்போது பாலிசிதாரர்கள் மற்றும் பணியாளர்கள் தள்ளுபடி பெறலாம் என்றும் செபியிடம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன. பங்கு வெளியீட்டில் குறைந்தபட்சம் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றன.
மேலும் படிக்க | காலாவதியான பாலிஸியை புதுப்பிக்க LIC அறிவித்துள்ள சிறப்பு திட்டம்..!!
இந்த மாத தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்த நிதியாண்டில் பங்கு விலக்கல் ரூ.78,000 கோடியாக இருக்கும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் (Budget 2022) உரையின் போது, எல்ஐசியின் ஐபிஓ (LIC IPO) குறித்த தகவலையும் நிதியமைச்சர் தெரிவித்தார். விரைவில், அதாவது 2022-23 நிதியாண்டில் எல்ஐசியின் ஐபிஓ கொண்டுவரப்படும் என்றார். 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எல்ஐசியின் ஐபிஓ (LIC IPO) குறித்து, மார்ச் இறுதிக்குள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
LIC நிறுவன பங்குகளின் விற்பனை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முன்னதாக Paytm நிறுவனம் பங்குகள் வெளியீட்டில் அதிகபட்சமாக ₹18,300 கோடியை திரட்டியது.
மேலும் படிக்க | Budget 2022 விரைவில் வருகிறது LIC IPO: நிர்மலா சீதாராமன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR