வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட கேரளா செல்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி!
கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 97-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர்.
கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.
கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Had a telephone conversation with Kerala CM Shri Pinarayi Vijayan just now. We discussed the flood situation across the state and reviewed rescue operations.
Later this evening, I will be heading to Kerala to take stock of the unfortunate situation due to flooding. @CMOKerala
— Narendra Modi (@narendramodi) August 17, 2018
இந்நிலையில் கேரளாவின் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்ளிடன் கேட்டறிந்ததாகவும், இன்று மாலை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட கேரளா செல்கின்றேன் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்!