கும்பமேளா 2021: அனைவரையும் கவரும் 18 அங்குல உயரம் கொண்ட நாக சாது

கும்ப மேளாவில், சாமியார்கள், அகோரிகள், நாக சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள்,  ஆகியோர் அதிகம் வருவார்கள். அதனால், அவர்களிடம்  ஆசி வாங்குவதற்காகவே பலர் கும்ப மேளாவிற்கு வருகை தருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2021, 09:34 PM IST
  • கும்ப மேளாவில், சாமியார்கள், அகோரிகள், நாக சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள், ஆகியோர் அதிகம் வருவார்கள்.
  • அவர்களிடம் ஆசி வாங்குவதற்காகவே பலர் கும்ப மேளாவிற்கு வருகை தருகின்றனர்.
  • "உலகின் மிகச்சிறிய துறவி" என்று கருதப்படும் இவரது பிரகாசமான கண்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.
கும்பமேளா 2021: அனைவரையும் கவரும் 18 அங்குல உயரம் கொண்ட நாக சாது title=

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்நேரத்தில், கொரோனா பரவலை தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி  கும்பமேளா திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.  கும்பமேளாவுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப மேளாவில், சாமியார்கள், அகோரிகள், நாக சாதுக்கள், சன்னியாசிகள், துறவிகள்,  ஆகியோர் அதிகம் வருவார்கள். அதனால், அவர்களிடம்  ஆசி வாங்குவதற்காகவே பலர் கும்ப மேளாவிற்கு வருகை தருகின்றனர். அவர்களிடம் ஆசி வாங்குவது புண்ணியம் என்பதால்,  பல்வேறு தரப்பினர் கும்ப மேளாவிற்கு வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் , ஹரித்வாருக்கு வருகை தந்துள்ள நாக சாதுவான நாராயண் நந்த் கிரி மகாராஜ் என்னும் நாக சாது அனைவரையும் ஈர்த்துள்ளார். அவரது வயது 55. 18 அங்குல உயரம் கொண்ட அவராது எடை 18 கிலோ மட்டுமே. இவர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாத இந்த துறவிக்கு அவரது பக்தர்கள் சேவை செய்து வருகின்றனர்.

ALSO READ | கிராமி விருது விழாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த ஈஷா மஹாசிவராத்திரி விழா

"உலகின் மிகச்சிறிய துறவி" என்று கருதப்படும் இவரது பிரகாசமான கண்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர்தான் உலகில் மிகவும் இளமையான நாக சன்னியாசி என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான நாகர்கள் தங்கள் இளம் வயதிலேயே, சந்நியாசம் பெறுகிறார்கள் சிவனின் அழைப்பை ஏற்று, தங்கள் குடும்பங்களையும் , உடமைகளையும் விட்டுவிட்டு - சிவனை பூஜிப்பதில்  தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.

ஆழ்ந்த தியானங்கள், கடுமையான யோகா, ஆன்மீக சடங்குகள் மற்றும் வேதங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் ஆன்மீக தேடலில் ஈடுபட  இல்லற வாழ்க்கையை துறக்கிறார்கள்.

ஒரு சந்நியாசி , நாக சாது என்ற மதிப்பிற்குரிய பட்டத்தை பெற ஆறு வருட பிரம்மச்சரிய வாழ்க்கை, 12 ஆண்டுகள்  சிவ பூஜை  செய்திருக்க வேண்டும். இவர்களை தரிச்சிப்பதே புண்ணியம் என்பதால், மக்கள் இங்கே கூடுகிறார்கள்.

ALSO READ | Shocking Attack: பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் மீது தாக்குதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News