நீலம் சஞ்சீவ ரெட்டி முதல் திரௌபதி முர்மு வரை, ஜூலை 25 அன்று பதவி ஏற்கும் காரணம்

President of India:  டாக்டர் ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக 26 ஜனவரி 1950 அன்று பதவியேற்றார். அவர் மே 13, 1962 வரை அந்த பதவியில் நீடித்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2022, 03:24 PM IST
  • 1977ம் ஆண்டு முதல் குடியாரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்று வருகிறது.
  • அன்றைய தினம் இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவராக நீலம் சஞ்சீவ ரெட்டி பதவியேற்றார்.
  • அதன் பின்னர் அனைத்து குடியரசுத் தலைவர்களும் ஜூலை 25 அன்று பதவியேற்றனர்.
நீலம் சஞ்சீவ ரெட்டி முதல் திரௌபதி முர்மு வரை, ஜூலை 25 அன்று பதவி ஏற்கும் காரணம் title=

திரௌபதி முர்மு இந்தியாவின்குடியரசுத் தலைவராக இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்றார். இதன் மூலம், இந்தியாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்  குடியரசுத் தலைவர் என்ற புகழையும் அடைந்திருக்கிறார்.  முன்னதாக, ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், அப்துல் கலாம் என வரிசையாக இவர்கள் அனைவரும் ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவராகப் பதவியேற்றனர். குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணம் ஏன்  ஜூலை 25ம் தேதி நடைபெறுகிறது என்பதற்கான காரணம் தெரியுமா... 

1977ஆம் ஆண்டு முதல், குடியரசுத் தலைவர் பதவியேற்பு ஜூலை 25ஆம் தேதி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவராக நீலம் சஞ்சீவ ரெட்டி பதவியேற்றார். அதன் பின்னர் அனைத்து குடியரசுத் தலைவர்களும் ஜூலை 25 அன்று பதவியேற்றனர். ஏனெனில் 1977 முதல் அனைத்து ஜனாதிபதிகளும் தங்கள் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 45 ஆண்டுகளாக  அனைத்து குடியரசுத் தலைவர்களின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவியேற்றார்.

மேலும் படிக்க | President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன

டாக்டர் ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவரானார். அவர் 26 ஜனவரி 1950 அன்று பதவியேற்றார். அவர் மே 13, 1962 வரை பதிவியில் இருந்தார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பின்னர் குடியரசுத் தலைவரானார். அவர் தனது முழு பதவிக்காலம் வரை பதவியில் இருந்தார். ஆனால்  ஃபக்ருதீன் அலி அகமது மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் ஜனாதிபதி பதவி காலம் முழுவதையும் நிறைவு செய்ய முடியவில்லை. பின்னர், விவி கிரி தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். பி.டி. ஜட்டி ஜூலை 25, 1977 வரை இடைக்காலத் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் அனைத்து குடியரசுத் தலைவர்களும் தங்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்தை  முழுமையாக நிறைவு செய்துள்ளனர். அனைவரும் ஜூலை 24 அன்று தங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். எனவே, அடுத்த  குடியரசுத் தலைவர் ஜூலை 25 அன்று பதவியேற்று வருகிறார். கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த பாரம்பரியம் இருந்து வருகிறது.

மேலும் படிக்க | குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News