CAA-க்கு எதிராக கேளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது!

Last Updated : Jan 14, 2020, 12:17 PM IST
CAA-க்கு எதிராக கேளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! title=

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது!

திருத்தப்பட்ட சட்டம் இந்திய அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட சம உரிமைக்கான விதிகளுக்கு எதிரானது என்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனு 131-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமானது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவை மீறும் சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தனது மனுவில், கேரள அரசு, அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளையும், இந்தியாவில் மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்பையும் குடியுரிமை திருத்த சட்டம் மீறுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அரசியலமைப்பில் 14-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் உச்சநீதிமன்றம், இது எந்தவிதமான அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக இருந்தால், அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் ஒருவர் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம் (இது ஒரு அடிப்படை உரிமையாகவும் இருப்பது).

பிரிவு 14 அனைவருக்கும் சம உரிமைக்கான வாக்குறுதியை அளிக்கிறது, அதே சமயம் 21-வது பிரிவு 'சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு நடைமுறையின்படி தவிர எந்தவொரு நபரும் தனது வாழ்க்கையையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையோ இழக்கக்கூடாது' என்று கூறுகிறது. பிரிவு 25 'அனைத்து நபர்களும் மனசாட்சியின் சுதந்திரத்திற்கு சமமாக உரிமை உண்டு' என கூறுகிறது.

இதன் மூலம், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய முதல் மாநில அரசு கேரள அரசாக அறியப்படுகிறது. 

முன்னதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் (CAA)-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை கேரளா சட்டமன்றம் முன்வைத்தது, இதன் மூலம் CAA-க்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த முதல் மாநில சட்டமன்றம் கேரளா என்ற பெருமையினை முன்னதாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் கேரள சட்டமன்றம் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆளும் LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி UDF ஆகிய இரண்டு தரப்பினரும் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்க ஒற்றுமைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக அல்லாத 11 முதலமைச்சர்களுக்கு முதல்வர் விஜயன் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News