குரோதி ஆண்டு ஆனி மாதம் 14ம் நாள் வெள்ளிக்கிழமை! ஜூன் 28! 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்!

Daily Rasipalan 2024 June 28 : 2024 ஜூன் 28ஆம் தேதியான இன்று, 12 ராசிகளின் தலைவிதியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2024, 06:02 AM IST
  • 2024 ஜூன் 28ஆம் நாள் ஜோதிட கணிப்பு
  • குரோதி ஆண்டு ஆனி மாதம் 14ம் நாள்
  • இன்றைய நாள் யாருக்கு எப்படி இருக்கும்?
குரோதி ஆண்டு ஆனி மாதம் 14ம் நாள் வெள்ளிக்கிழமை! ஜூன் 28! 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்! title=

Daily Astro : நமது செயல்களுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதை ஊகமாக கணிக்கும் ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம். குரோதி ஆண்டின் ஆனி 14ம் நாள் தேய்பிறை சப்தமி, பூரட்டாதி நட்சத்திரம் கூடிய இன்று 28-06-2024 வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்... 

மேஷம்
தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளின் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும்.  

ரிஷபம் 
காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்களின் சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  

மிதுனம் 
மருத்துவத் துறைகளில் சாதகமான சூழல் அமையும். தொழில் நிமித்தமாக மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். மனதளவில் இருந்த அமைதியின்மை குறையும். தன வரவுகளை மேம்படுத்துவதற்கான சூழல்கள் அமையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  

கடகம் 
இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!

சிம்மம் 
புதுமையான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் இருந்த இழுபறிகள் மறையும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.  

கன்னி 
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆவணத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். 

துலாம் 
சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த சஞ்சலம் மறையும்.  

விருச்சிகம் 
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...

தனுசு 
இடம் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  

மகரம் 
வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  

கும்பம் 
சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். பேச்சுகளுக்கு மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும்.  

மீனம் 
தொழில் வட்டாரத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்று இரண்டு முறை படிப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தனித்திருந்தால் கெட்டது செய்யும் குரு! சேர்ந்திருந்தால் சூப்பர் பலன்களைக் கொடுக்கும் மாயம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News