ஒரு வழியா வாராக்கடன் தொல்லை குறைஞ்சுது! நிம்மதி தரும் ரிசர்வ் வங்கியின் FSR அறிக்கை!

FSR Of RBI On SCBs NNPA : கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாராக் கடன்கள் குறைந்துள்ளது, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2024, 08:56 AM IST
  • இந்திய வங்கிகளின் வராக்கடன்
  • வங்கிகளின் பிரச்சனை குறைந்தது
  • ஆர்பிஐயின் 2024 அறிக்கை
ஒரு வழியா வாராக்கடன் தொல்லை குறைஞ்சுது! நிம்மதி தரும் ரிசர்வ் வங்கியின் FSR அறிக்கை! title=

புதுடெல்லி: வங்கிகளின் வராக்கடன்கள் சொத்துக்கள் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், வலுவான ஜிடிபி எண்கள் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவும் என்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (Financial Stability Report) தெரிவித்துள்ளது.

2023-24ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product), அதற்கு முந்தைய நிதியாண்டின் 7 சதவீதத்திற்கு எதிராக 8.2 சதவீதம் உயர்ந்தது, தனியார் மற்றும் அரசு நுகர்வு மற்றும் வெளிப்புற காரணிகளின் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் நிலை முன்னேறியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் 2024 இறுதியில் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளின் (scheduled commercial banks (SCBs)) மொத்த செயல்படாத சொத்துகளின் விகிதம் 2.8 சதவீதமாகவும், நிகர செயல்படாத சொத்துகள் (non-performing assets (NNPA) ) விகிதம் 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக FSR அறிக்கை காட்டுகிறது. அனைத்து SCBகளின் GNPA விகிதம் மார்ச் 2025க்குள் 2.5 சதவீதமாக மேம்படும் என்று, ரிசர்வ் வங்கியின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு தேவை நிலைமைகள் வலுவாவது, வணிகத்தின் மீதான நம்பிக்கை வலுவடைவது, மூலதனச் செலவினங்களில் அரசாங்கத்தின் நீடித்த கவனம் என இந்திய பொருளாதாரம் விரைவில் மேம்படுவதற்கான பல சாதகமான அம்சங்கள் உள்ளன என்று FSR கூறியது. முதலீட்டு வளங்களை அதிகரிக்கும் முயற்சிகளும், ரியல் எஸ்டேட் செயல்பாடு மேம்பாடும் துரிதமாகலாம்.  

இந்தியாவில் கடன் வளர்ச்சி ஆழமடைந்து வருவதும், ஆரோக்கியமான வங்கி இருப்புநிலையால் சீரமைக்கப்படுகிறது என்பதால்,  உலகளாவிய மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று நம்பப்படுகிறது. மேலும், விநியோக நிலைமைகள், பொருட்களின் விலைகளில் அவற்றின் தாக்கம், கிராமப்புற பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் வானிலை தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்தும் இந்தியா விரைவில் மீண்டு விடும் என்று தெரிகிறது.  

மேலும் படிக்க | செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!

நிச்சயமற்ற வளர்ச்சி வாய்ப்புகள், அதிக பொதுக் கடன் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றிலிருந்து எழும் சவால்கள் இருந்தபோதிலும், உலகளாவிய நிதி அமைப்பு நெகிழ்ச்சியுடன் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறிப்பிட்டது. ஏறக்குறைய உலகளாவிய மேக்ரோ நிதி அபாயங்கள் குறைந்துவிட்டன, அதற்கு காரணம் பணவீக்கத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் மற்றும் தற்போதைய பொருளாதார மீட்சி ஆகியவை என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

ஆரோக்கியமான வங்கி முறையால் வலுப்படுத்தப்பட்டுள்ள, உள்நாட்டு நிதி அமைப்பு நிலையானது மற்றும் உண்மையான செயல்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அரையாண்டு எஃப்எஸ்ஆர்உலகளாவிய தலையீடுகளுக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் வலுவான மேக்ரோ பொருளாதார அடிப்படைகளால் வலுவாக இருக்கிறது.

சமீபத்திய நெருக்கடிகள் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட நிதி அமைப்பு வலுவாகவும் துடிப்பாகவும் இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் சீரான வேகத்தில் விரிவடைந்து வருவதாக , ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

மேலும் படிக்க | இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்க மத கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைக்கு IMF கண்டனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News