இந்திய விமான படையின் MiG-21 விமானம் விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி!

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2023, 01:52 PM IST
  • விமானி பத்திரமாக வெளியேறிய நிலையில், ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.
  • ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளது.
  • இன்று காலை வழக்கமான பயிற்சியின் போது சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது.
இந்திய விமான படையின் MiG-21 விமானம் விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி! title=

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து விமானி பத்திரமாக வெளியேறிய நிலையில், ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதால், மூன்று சிவிலியன்கள் உயிரிழந்ததை உள்ளூர் போலீசார் உறுதி செய்துள்ளனர். விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், மீட்பு பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

விமானத்தில் இருந்து வெளியேறிய விமானி, சூரத்கர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிகானேர் ரேஞ்ச் ஐஜி ஓம் பிரகாஷை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க விமானி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நிலையில், ராஜஸ்தானில் ஒரு கிராமத்தின் புறநகரில் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் இறந்துள்ளனர். மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்," என்று அந்த அதிகாரி கூறினார். IAF ஒரு அறிக்கையில், " இந்திய விமான படையில்  MiG-21 விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியின் போது சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது"என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹனுமன்கர் காவல் துறை கண்காணிப்பாளர், சுதீர் சவுத்ரி கூறுகையில், ரத்தி ராம் ஒருவரின் வீட்டின் மீது விமானம் மோதியதில், அவரது மனைவி பாஷோ கவுர் மற்றும் லீலா தேவி மற்றும் பான்டோ கவுர் என அடையாளம் காணப்பட்ட இரு பெண்களும் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தீக்காயங்கள் பெண்களின் மரணத்திற்கு வழிவகுத்தன, மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். முதற்கட்ட தகவல்களின்படி, ரத்திராமின் வீடும், அருகிலுள்ள சில வீடுகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?

விபத்தை நேரில் கண்டவர் இது குறித்து கூறுகையில், ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், பாராசூட் கீழே வருவதைக் கண்டதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். சில நொடிகளில் ரத்தி ராமின் வீட்டின் மீது விமானம் விழுந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. "உடனடியாக உள்ளூர் மக்கள் தண்ணீர் மற்றும் மணலின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று உள்ளூர்வாசி ஹனுமங்கரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. MiG-21 விமானங்கள் படைகளில் இருந்து நீகக்ப்படும் நிலையில் உள்ளது. மீதமுள்ள மூன்று விமானங்களையும் 2025 க்குள் விமான படையில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 2023 இல், ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியின் போது இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்களான Sukhoi Su-30 மற்றும் Mirage 2000 விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கிய நிலையில், மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் விழுந்து நொறுங்கியது. கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் அருகே, இரட்டை இருக்கை கொண்ட Mig-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இரண்டு விமானிகள், படுகாயமடைந்து உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில்,  MiG-21 ஜெட் விமானமும் அடங்கும். மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த விமானம் விமானமானது தற்போதைய 5ம் தலைமுறை விமானத்திற்கு கூட சவால் விடக்கூடியதாகும் திறன் பெற்றது. உலகம் முழுவதும் இந்த விமானத்தை, இந்தியா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News