Coronavirus Cases In India: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,134 பேருக்கு புதிதாக கோவிட் -19 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய தொற்றுடன் தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க: Covid-19 Guidelines: அதிகரிக்கும் கொரோனா...புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இந்தியாவில் கொரோனா பரவல் டெல்லியில் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். டெல்லியில் திங்களன்று தேசிய தலைநகரில் கொரோனா பரவல் விகிதம் 6.98 சதவீதத்துடன் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 3.95 சதவீத கொரோனா பரவல் விகிதத்துடன் 72 கோவிட் -19 தொற்று பதிவானது.
இன்ஃப்ளூயன்ஸா ஏ துணை வகை H3N2 வைரஸால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது. சளி, தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்தியாவில் தற்போது கொரொனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளன. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று மற்றும் கேரளாவால் ஐந்து என கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44,16,0279 ஆகவும், கொரோனா இறப்பு எண்ணிக்கை 53,0813 ஆக உள்ளது.
மேலும் படிக்க: மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ