சீனாவை ஒடுக்க தொழில்நுட்பமும் சுற்றுலாவும் பலன் தருமா?

இந்திய எல்லையை பாதுகாக்க இராணுவத்தை எல்லையில் நிறுத்துவதை தவிர, தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு, தகவல் தொடர்பு மேம்படுத்துதல் மற்றும் எல்லை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்கலாம்.  

Last Updated : Jun 23, 2020, 11:43 AM IST
  • இந்திய எல்லையை பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது
  • எல்லை பகுதியில் தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரபடுத்தப்படலாம்.
  • சுற்றுலாவை மேம்படுத்தி அதன் மூலம் உரிமையை நிலைநாட்ட இந்தியா திட்டமிடுகிறதா?
சீனாவை ஒடுக்க  தொழில்நுட்பமும் சுற்றுலாவும் பலன் தருமா?  title=

இந்திய எல்லையை பாதுகாக்க இராணுவத்தை எல்லையில் நிறுத்துவதை தவிர, இந்தியா, மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு  அண்டை நாட்டினர் நமது எல்லையை ஆக்கிரமிப்பதை தடுக்கலாம் – அவை,  தொழில் நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, தகவல் தொடர்பு மேம்படுத்துதல் மற்றும் எல்லை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகும்.  

தற்போதைய காலகட்டத்தில், லாடக் பகுதியை  ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. இந்த சர்ச்சை குறித்து விவாதிக்க, LAC பகுதியில், சீன தரப்பில் உள்ள மோல்டோ பகுதியில், கமாண்டர் நிலையிலான கூட்டங்களை இரு நாடுகளும் நடத்துகின்றன. கடந்த வாரம், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததை அடுத்து, இது குறித்து இந்தியா இன்னும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, இந்தியாவிற்கு நன்றாக கை கொடுக்கும் நிலை உள்ளது. இஸ்ரேல் இராணுவத்தை போல், இரவு  நேர நடமாட்டத்தை கண்காணிக்க, நைட் விஷன் கேமிராக்கள்,  LAC பகுதியில் உள்ள நடவடிக்கைகளை கண்காணிக்க மோஷன் சென்சார்கள் மற்றும் சீஸ்மிக் சென்சார்கள் போன்றவற்றை இந்திய  இராணுவம் அமைக்கலாம். இது போன்ற தொழில்நுட்ப உதவியுடன், சட்ட விரோத நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரால் எளிதில் கண்டறிந்து, முறியடிக்க இயலும்.

Also read | வேலை இல்லையா? கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு!

 எல்லையில்  பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு வழி, நெட்வொர்க் பிரச்சனை உள்ள உயரமான பகுதிகளில் 5G தொழில்நுட்பத்தை அமைப்பது ஆகும். சீனா (China) ஹிமாலய பகுதியில் 5G தொழில்நுட்பத்தை அமைத்துள்ளது. இது இந்தியா எல்லையில் தகவல் தொடர்பை வலுப்படுத்தும்.  மேலும் விமான நிலையங்களை அமைத்து பராமரித்தால், தேவைப்படும் போது இராணுவத்தினரை விரைவில்  அங்கு கொண்டு செல்லலாம்.

 மூன்றாவது வழி எல்லை பகுதியில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தி, அங்கு மனிதர்கள் வாழும் வகையில் கட்டமைப்பை உருவாக்கி அங்கே சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகும். மக்கள் தொகை இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவது என்பது கடினம் ஆகும்.

Also read | இனி Online விற்பனையிலும்; எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் என குறிப்பிட வேண்டும்...

மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதிகள் மீது சர்வதேச மட்டத்தில் அதிக கவனம் கிடைக்கும், அப்பகுதிக்கு  வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு  விசா வழங்கும் உரிமை நம்மிடம் இருக்கும் என்பதால், உரிமையை நிலை நாட்டுவதும் எளிது.

இந்தியா தனது எல்லை பகுதியில் சாலை கட்டுமான பணிகளை தொடக்கியதால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத சீனா, LAC பகுதியில் அத்து மீறி பதற்றத்தை அதிகரித்தது. LAC பகுதியில், சாலை மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த புது தில்லி எடுத்த முடிவினால், தனது தந்திர நோக்கங்கள் நிறைவேறாது என்ற அச்சத்தினால்,  அதை தடுக்க, கிழக்கு லடாக், கல்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) , போங்காங் ஏரி ஆகிய இடங்களுக்கு தனது துருப்புகளை அனுப்பியது. 

Trending News