பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Pongal Festival: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறையில் இருக்கும்.

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2025, 07:52 AM IST
  • 18ஆம் தேதியும் பத்திரபதிவு கிடையாது!
  • தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
  • 20ஆம் தேதி கூடுதல் டோக்கன் வழங்கப்படும்.
பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! title=

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14 முதல் 16 வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. இந்த விடுமுறை தினத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறையில் இருக்கும். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஏராளமான கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு அனைவரின் பயணத்தை எளிதாக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்

ஜனவரி 17 விடுமுறை

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்றவர்கள் பொறுமையாக வேலைக்கு திருப்பும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 25 சனிக்கிழமை வேலை நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிப்பு அலுவலகம்

தமிழகத்தில் ஜனவரி 17 வரை தொடர்ச்சியான விடுமுறை காலம் இருப்பதால், பொதுவாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18 அன்று ஒரு நாளுக்கு மட்டும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 20 அன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே அன்று கூடுதல் பதிவுகள் வரும் என்று அரசு எதிர்பார்த்தது. அதன்படி கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமான 100 முன்பதிவுக்கு பதிலாக 150 பதிவுகளும், இரண்டு பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும், அதிகளவு பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 சாதாரண நிலையான முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TN Rain Alert: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News