தை மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், அமோக வெற்றி.... முழு ராசிபலன் இதோ

Pongal 2025 Rasipalan: இன்று தை மாதம் பிறந்தவிட்டது. பொங்கல் திருநாளுடன் தொடங்கியுள்ள இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும்?

Thai Matha Rasipalan: இன்று சூரியன் பெயர்ச்சி. சூரிய பகவான் மகர ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இது தவிர தை மாதத்தில், பிப்ரவரி 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி இந்த மாதத்தின் பெரிய நிகழ்வாக பார்க்கபப்டுகின்றது. மேலும், இந்த மாதம் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் எந்த ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன? யாருக்கு தொல்லைகள் தொடரும். மேஷம் முதல் மிதுனம் வரை தை மாத ராசிபலனை இங்கே காணலாம். 

1 /13

மேஷம்: தை மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனுகூலமாக நடந்து முடியும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

2 /13

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி உறவு சுமூகமாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வணிகர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

3 /13

மிதுனம்: தை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு அதிகமாவதற்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளும் அதிகமாக இருக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்க வாய்ப்புள்ளது.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தை மாதம் லாபகரமானதாக இருக்கும். பிப்ரவரி 4 நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தியின் தக்கத்தால் பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த குரு பெயர்ச்சி தாக்கத்தால் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆக வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உள்ளது. வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

6 /13

கன்னி: சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

7 /13

துலாம்: கிரக பயிற்சிகளால் துலாம் ரசிக்காரர்களுக்கு அதிக நன்மை ஏற்படும். இந்த மாதம் சாதகமான பல செய்திகளை பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். பண வர அதிகமாகும்.

8 /13

விருச்சிகம்: சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக தை மாதம் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வணிகம் தொடங்க நினைப்பவர்கள் இப்பொழுது அதை செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களிடையே சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் இந்த மாதம் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தை மாதம் கலவையான பலன்களை அளிக்க கூடியதாக இருக்கும். செலவுகள் அதிகமாகலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கலாம். லாபம் அதிகரிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் இதனால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

11 /13

கும்பம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் தை மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆடை ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பனிச் சுமை அதிகரிக்கலாம். இட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் மந்த நிலையில் இருக்கக்கூடும். வியாபாரத்தை முன்னுக்கு கொண்டு வர அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்திகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது லாபம் உண்டாகும். முதலீடு செய்யவும் நல்ல காலமாக இருக்கும். பண வரவு அதிகமாகும் ஆக இருக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.