நேர்கோட்டில் சந்திக்கும் சூரியன் - செவ்வாய்: இன்று லக்கு மேல லக்கு - இந்த 3 ராசிகளுக்கு...

Suryan Sevvai Pratiyuti Yog: சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் இன்று நேர்கோட்டில் சந்திப்பதால், பிரதி யுதி யோகம் உண்டாகும். இதனால் அதிக நன்மைகளை பெறும் 3 ராசிக்காரர்களை இங்கு காணலாம்.

பிரதி யுதி யோகத்தால் குடும்பம், பணி, பொருளாதாரம் ஆகியவற்றில் நன்மைகள் உண்டாகும். இதனால் இந்த 3 ராசிக்காரர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

1 /8

ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் (Suryan) மற்றும் செவ்வாய் பகவான் (Sevvai) ஆகிய இரண்டும் சக்திவாய்ந்த கிரகங்களாக பார்க்கப்படுகிறது. அதிலும் சூரிய பகவான் கிரகங்களின் அரசராகவும், செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாகவும் பார்க்கப்படுகிறது.   

2 /8

இவை இரண்டும் தொடர்ந்து பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும். இந்த 2 கிரகங்கள் ஒரு ராசியில் இணையும்போது சில ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் அதிகமாகும். 

3 /8

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, இன்று ஒரு விசேஷமான அரிய நிலை உருவாகும். இன்று சூரியனும் செவ்வாயும் ஒரே நேர்கோட்டில் சஞ்சரிப்பார்கள். இதன் காரணமாக பிரதி யுதி யோகம் (Pratiyuti Yog) உருவாகும்.   

4 /8

இந்த பிரதி யுதி யோகத்தால் இந்த மூன்று ராசிகளுக்கு இன்று முதல் அதிக நன்மைகளை பெறுவார்கள். பொருளாதார நன்மை மட்டுமின்றி சுப நிகழ்ச்சிகள் கைக்கூடும். வீட்டிலும் நல்ல காரியம் நடக்கும். அந்த வகையில், அந்த 3 அதிர்ஷ்ட ராசிகளை இங்கு காணலாம்.  

5 /8

கன்னி (Virgo): பிரதி யுதி யோகத்தால் இந்த ராசிக்காரரின் வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும். கடின உழைப்புக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும், இதனால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை சார்ந்து அதிக பயணத்தில் ஈடுபடுகின்றனர். இன்று வணிகத்திலும் லாபம் உண்டாகும்.   

6 /8

துலாம் (Libra): பிரதி யுதி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான பொருள்கள் குவியும். இன்று நீங்கள் சில சமூக நலப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மேலும், தான தர்மத்திலும் ஈடுபடுவீர்கள். வணிகத்திலும் இன்று நல்ல லாபம் கிடைக்கும். மேலும், நீங்கள் அதிக பணம் சம்பாதித்து அதிக பணத்தையும் சேமிப்பீர்கள்.   

7 /8

தனுசு (Sagittarius): இந்த யோகத்தால் இன்று மிகவும் அதிர்ஷ்டகரமான நாள் எனலாம். வேலையில் முதலாளி உங்களை புகழ்வார்கள். உங்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கலாம். குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும். நல்ல காரியம் கைக்கூடும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.