சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அந்த மாநில நிலக்கரி வர்த்தக குழுவுக்கு எதிராக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராய்ப்பூர் மற்றும் மஹாசமுந்தில் இந்த குழுவுடன் தொடர்புடைய பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தவிர கோர்பாவில் அவருடன் பணியாற்றிய டிரான்ஸ்போர்ட்டரின் வீடும் வருமான வரித்துறையின் மத்திய குழுவினரால் குறிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
இந்த டிரான்ஸ்போர்ட்டரின் வீடு கோர்பாவில் உள்ள பழைய பஸ்தி துர்பா சாலையில் உள்ள மெஹர் வாடிகா அருகே உள்ளது. சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்ற டிரான்ஸ்போர்ட்டர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக ஆவணங்களை சோதனை செய்து வந்தனர். இந்த நடவடிக்கையின் போது, குடியிருப்புக்கு வெளியே நான்கு திசைகளிலும் மத்திய ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதன் போது வெளியாட்கள் எவரும் வீட்டிற்குள் செல்லவோ, வீட்டினுள் எவரும் வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
கோத்தாரியில் அமைந்துள்ள நிலக்கரி சலவை ஆலை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விவாதிக்கப்படுகிறது. மேலும், 77 லட்சம் மதிப்பிலான நிலம், டிரான்ஸ்போர்ட்டர் பெயரில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரே நபரின் பெயரில் மொத்தம் ரூ.23 கோடிக்கு ஐந்து தனித்தனி பதிவுகள் உள்ளன. இதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். போக்குவரத்து தொழிலதிபருக்கு பிலாஸ்பூரில் மற்றொரு வீடு உள்ளது, அங்கும் விசாரணை நடத்தப்படும் என்று பேசப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையால், சில நிர்வாக அதிகாரிகளும் பதற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR