எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்களை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் (USFF) கணினிகள் மற்றும் சர்வர்கள் இறக்குமதிக்கான கட்டுபாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இறக்குமதிக்காக கட்டுப்பாடுகள் என்றால் என்ன?
ஒரு பொருளின் இறக்குமதியை கட்டுப்பாடுகளின் பிரிவில் வைப்பது, என்பது அவற்றின் இறக்குமதிக்கு உரிமம் அல்லது அரசாங்கத்தின் அனுமதி கட்டாயமாகும். HSN 8741 விதியின் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரம், சரியான லைசென்ஸ் பெற்று இருந்தால் மட்டும், மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) வழங்கிய தகவலின்படி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை, தரப்படுத்தல் மற்றும் மதிப்பீடு, பழுதுபார்ப்பு மற்றும் திரும்பப் பெறுதல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றின் நோக்கத்திற்காக ஒரு சரக்குக்கு 20 பொருட்கள் வரை இறக்குமதி உரிமத்திலிருந்து இப்போது விலக்கு அளிக்கப்படும். சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
வெளியிடப்பட்ட அறிவிப்பு
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்கள் இறக்குமதி செய்வது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூன் காலாண்டில் இறக்குமதி மதிப்பு விபரம்
இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 6.25 சதவீதம் அதிகரித்து 19.7 பில்லியன் டாலராக இருந்தது. நாட்டின் மொத்த இறக்குமதியில் மின்னணு சாதனங்களின் இறக்குமதி 7% முதல் 10% வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! 18 மாத டிஏ நிலுவைத் தொகை.. முக்கிய அப்டேட் இதோ
உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊக்கம் பெறுவார்கள்
மத்திய அரசின் இந்த முடிவால் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இந்த முடிவு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும், நாட்டில் தொடர்ந்து உற்பத்தி செய்து, உள்ளூர் விநியோகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்.
உள்நாட்டு உற்பத்தியைத் ஊக்குவிக்க திட்டம்
எலக்ட்ரானிக்ஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியைத் ஊக்குவிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் போன்ற தயாரிப்புகளை உள்ளடக்கிய IT வன்பொருள் உற்பத்தியில் பெரு நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்காக, $2 பில்லியன் உற்பத்தி ஊக்கத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலக்கு யாருக்கெல்லாம் பொருந்தும்
எனினும், பழுது பார்ப்பதற்காக வெளிநாட்டில் வாங்கப்பட்ட, குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திருத்தப்பட்ட சாமான்கள் விதிகளின் கீழ், இறக்குமதிக்கு மேற்கூறிய கட்டுப்பாடு பொருந்தாது" என்று வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் அப்டேட்: 46% அகவிலைப்படி.. இந்த நாளில் வரும் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ