விமான ஊழியர்களிடம் அத்துமீறினால் விமானத்தில் பறக்க தடை!

Last Updated : Sep 8, 2017, 02:46 PM IST
விமான ஊழியர்களிடம் அத்துமீறினால் விமானத்தில் பறக்க தடை! title=

விமான ஊழியர்களிடம் பிரச்னை செய்பவர்கள் மீண்டும் விமானத்தில் பறக்க தடை விதிக்கும் வகையில் மத்தியஅரசு இன்று  'நோ-ஃப்ளை லிஸ்ட்' வெளியிட்டது. 

இந்த பட்டியல் ஆனது மூன்று நிலை தடைகளை பற்றி கூறியுள்ளது:-

1. விமான ஊழியர்களை திட்டுவது, அடிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டால் 3 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை.

2. சக பயணிகள், ஊழியர்களை தாக்குதல் போன்ற செயல்பாடுக்கு 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை.

3. விமானத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டால் 2 ஆண்டுக்கள் விமானத்தில் பறக்க தடை.

 

 

என மத்தியஅரசு இன்று(வெள்ளிகிழமை) அறிவித்துள்ளது.

Trending News