கோவிட் -19 காரணமாக மரணம் அடைந்தால் சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ .1 கோடி

கோவிட் -19 நோயாளிகளின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் ரூ .50 லட்சம் சிறப்பு காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2020, 04:57 PM IST
கோவிட் -19 காரணமாக மரணம் அடைந்தால் சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ .1 கோடி title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாளும் போது இறக்கும் சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ .1 கோடி உதவித்தொகையை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். இது அவர்களின் சேவைக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இருக்கும் என்றார்.

"கோவிட் -19 நோயாளிகளுக்கு சேவை செய்யும் போது யாராவது தங்கள் வாழ்க்கையை இழந்தால், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் எனில், அவர்களது குடும்பத்திற்கு அவர்களின் சேவை காரணமாக ரூ .1 கோடி வழங்கப்படும்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும் "அவர்கள் தனியார் அல்லது அரசுத் துறையைச் சேர்ந்தவர்களா? என்பது முக்கியமல்ல," என்று கெஜ்ரிவால் கூறினார்.

கோவிட் -19 நோயாளிகளின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் ரூ .50 லட்சம் சிறப்பு காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

தேசிய தலைநகரில் 120 கோவிட் -19 நோயாளிகள் இருப்பதாகவும், இந்த நோய் காரணமாக இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News