இந்திய எல்லையில் உள்ள சீன படைகளை முழுமையாக விலக்கிக் கொண்டு விட்டதாக சீனா கூறியிருந்தாலும், சீனா எப்போதுமே நம்பத்தகுந்த நாடாக இல்லை என்பதை தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனால், எல்லையில் இந்திய ராணுவம் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, எச்சரிக்கை நிலையுடன் தான் உள்ளது. ட்ரோன்கள் கூட கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், லடாக்கில் அடுத்த மாதம் முதல் கடும் குளிர் காலம் தொடங்கி விடும்.
ஜூன் 15 மாலை இந்திய சீன படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட போது கல்வான் பகுதியில் தட்ப நிலை பூஜ்யமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, பெருமளவிலான துருப்புகள் இறந்ததற்கான காரணம் ஹைபோக்ஸியா (hypoxia) அதாவது அதிக உயரமான பகுதியில் காணப்படும் ஆக்ஸிஜன் குறைபாடு மற்றும் ஹைப்போதெர்மியா (hypothermia) அதாவது கடுமையான குளிர் ஆகியவை ஆகும்.
சீனா, பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அவரக்ள் தரப்பில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு
இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டபோது, கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரமான ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்த காரணத்தினால், சீன படையினாரால், தாக்குபிடிக்க முடியவில்லை என தாக்குதலின் போது அங்கு இருந்த படை வீரர்கள் கூறியுள்ளனர்.
குறைவான ஆக்ஸிஜன் அளவினால் பாதிக்கப்படாதவர்கள், உறை நிலையில் இருந்த நதியில் விழுந்து இறந்தனர். இது தான் சீன படையின் நிலை.
சீன படையினாரால், அதிக குளிர் பிரதேசத்திலோ அல்லது ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ள இடத்திலோ, அவர்களால் திறமையுடன் சண்டையிட இயலாது.
கிழக்கு லாடாக் பகுதியில் செப்டெம்பர் மாதங்களில் கடுமையான குளிரோடு, கடும் குளிர் காற்று இருக்கும், தட்ப நிலை மிக மோசமாக இருக்கும். கடுமையான உறை பனி இருக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
சீனா ராணுவத்தினர் இந்த பகுதிக்கு ராணுவ வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்வார்கள். ஆனால், இந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் கால் நடையாக ரோந்து பணி மேற்கொள்வார்கள்.
ALSO READ | ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?
இந்திய ராணுவம், கடுமையான சியாச்சின் மலைப் பகுதி, காஷ்மீர் என கடுமையான மலைப்பகுதியில் சண்டையிட்டு, சிறந்த பயிற்சியை பெற்றுள்ளது. அவர்களால் இது போன்ற கடுமையான சூழல்களில் திறமையாக சண்டையிட இயலும்.
இந்தியாவும் சீனாவும் அக்சாய் சின் பகுதியில் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், படைகளை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதா அல்லது உறை நிலைக்கு கீழே 25 டிகிரி வரை தட்ப நிலை நிலவும் கடினமான சூழ்நிலையில் படைகளை அங்கேயே இருக்க வைப்பதா என்பது குறித்து விரைவில் சீனா முடிவெடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். குளிர்காலம் துருப்புக்களை மட்டும் பாதிக்காது, பீரங்கிகளின் என்ஜின்களும் உறைநிலையில் வேலை செய்யாது.
சீன ராணுவம் மனதில் கொள்ள வேண்டிய மற்ற பிரச்சினை என்னவென்றால், இரு நாடுகளுக்கிடையில் உள்ல 3488 கி.மீ நீளமுள்ள LAC பகுதியில் இந்திய இராணுவம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சீன படை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு துறை நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.
ALSO READ| இந்தியா வந்தடைந்தது ரஃபேல் விமானம்: தேசிய பாதுகாப்பு என பிரதமர் பெருமிதம்…!!!
இந்திய சீன எல்லையில் வரும், இந்தியாவின் கை தான் தற்போது வரை ஓங்கியுள்ளது. இப்போது ரஃபேல் விமானம் மூலம் இந்தியாவின் வலிமை பல மடங்கு கூடியுள்ள நிலையில், குளிர் காலம் எந்த விதத்தில் சீனாவை மேலும் பலவீனமடையச் செய்யும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.