இந்த ஊர்களில் நாளை மின்தடை இருக்கும்! மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 13-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

1 /6

ஜனவரி 13 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின் தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 /6

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) பல்வேறு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு நோக்கங்களுக்காக ஒவ்வொரு மாதமும் மின் தடைகளை திட்டமிடுகிறது.

3 /6

அந்த வகையில் ஜனவரி 13, 2025 அன்று மின்சாரம் தடைபடும் குறிப்பிட்ட பகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பகுதி முழுவதும் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை செய்யப்படும்.

4 /6

கோவையில் ஒண்டிப்புதூர், காவேரி நகர், எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ஜே.ஜே.நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

கோவை தெற்கில் உள்ள வலசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், மன்னம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6 /6

பல்லடத்தில் உள்ள என்சிஜி வலசு, AN பட்டி, செல்லகரச்சல், ஆறகுளம், புளியம்பட்டி, கரடிவாவி, வடுகபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.