இந்தியாவை உலகளவில் மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் சீர்திருத்தங்கள் தொடரும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்தியா - ஸ்வீடன் வணிக மாநாட்டு நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது,
இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான கூடுதல் சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கார்ப்பரேட் வரி குறைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று டெல்லியில் நடந்த இந்தியா-ஸ்வீடன் வர்த்தக உச்சி மாநாட்டில் அவர் கூறினார். இதையடுத்து, இன்நிகழ்சியில் பேசிய அவர் கூறுகையில்; முதலீட்டை அதிகளவில் ஈர்ப்பதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது. முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கார்ப்பரேட் வரியை குறைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு, வங்கி, சுரங்கம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்காக, இந்தியா திட்டமிட்டு வருகிறது. தேவையை அதிகரிப்பதற்காக, தனிநபர் வருமான வரி குறித்து, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரிச்சலுகைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றார்.
மேலும், “பட்ஜெட்டுக்கு பின்னர் பல்வேறு துறையினருடன் பேச்சு நடத்தி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து, அதற்கு தீர்வு காண அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி குறைப்பும், கட்டமைப்பு சீர்திருத்தமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார். சீர்திருத்தங்களில் எங்கள் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதை இந்த ஒரு நடவடிக்கையே எடுத்துக்காட்டுகிறது, நாங்கள் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.