ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இராணுவத் தளபதி பிபின் ராவத் சந்தித்து பேசினார்

இந்தியாவின் 14_வது ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்தை இன்று இந்தியாவின் இராணுவத் தளபதியின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.

Last Updated : Jul 27, 2017, 01:52 PM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இராணுவத் தளபதி பிபின் ராவத் சந்தித்து பேசினார் title=

டெல்லி: இந்தியாவின் 14_வது ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்தை இன்று இந்தியாவின் இராணுவத் தளபதியின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.

புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். 

இதையடுத்து, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை இராணுவத் தளபதியின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.

நாட்டின் பாதுகாப்பு குறித்தும், எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்தும் விவாதிக்கவே இந்த சந்திப்பு நடைபெருகிறது என தகவல் கிடைத்துள்ளது. 

 

 

Trending News