Malaika Arora health Tips | வயதாகும்போது எல்லோருடைய உடலும் பொழிவை இழக்கும், தோல் சுருக்கம் வந்துவிடும். உடல் பலவீனமடைய தொடங்கும். இது இயற்கையானது. ஆனால், 50 வயது ஆனால் கூட இளமையாக இருக்கவும் ஒரு வழி இருக்கிறது. .நம் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் இளமை 50 வயதிலும் ஊஞ்சலாடும். அதற்கு சரியான எடுத்துக்காட்டு நடிகை மலைகா அரோரா (Malaika Arora). அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்கம் காரணமாக இப்போதும் 30 வயதில் இருப்பது போல் இருக்கிறார். இதற்காக தன்னுடைய வாழ்க்கையில் தினசரி 7 மணி பழக்க வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அவரைப் போல் நீங்களும் இருக்க வேண்டும் என நினைத்தால், மல்லிகா அரோரா பின்பற்றும் 7 மணி பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
காலை 7 மணி மந்திரம் என்ன?
மலைகா அரோரா காலை 7 மணிக்கு வாட்டர் தெரபி எடுத்துக் கொள்கிறாராம். வாட்டர் தெரபி என்பது தமிழில் நீர் சிகிச்சை. தினமும் ஒவ்வொரு வகையான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சீரக நீர், மஞ்சள் நீர், வெள்ளரி நீர், இஞ்சி நீர் என ஆயுர்வேத மருத்துவ மகிமைகள் கொண்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீரை தினமும் காலையில் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
மாலை 7 மணி மந்திரம்
அதேபோல் மாலையில் 7 மணிக்கு மேல் எதையும் சாப்பிடுவதில்லையாம் மலைகா அரோரா. எப்படியான உணவாக இருந்தாலும் இரவு 7 மணிக்கு முன்பாக சாப்பிட்டு முடித்துவிடுவாராம். இதனை நீண்ட நாட்களாக தன்னுடைய வாழ்க்கை முறையாக பின்பற்றி வருகிறாராம். இதனால் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், உடல் நல பாதிப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரவு உணவு முறை
மலைகா அரோரா சொல்வது உண்மை தான். மாலை நேரத்தில் எப்போதும் கடினமான உணவுகளை சாப்பிடவே கூடாது. படுகைக்கு செல்லும் முன் குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பாக நீங்கள் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் இரவு 8 மணிக்குமேல் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவும். இரவு நேரத்தில் எப்போதும் சீக்கிரம் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடவும்.
காலை உணவு முறை
காலை உணவு முறையில் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை சாப்பிடவும், காய்கறிகள், கீரைகள், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட வேண்டும். அளவோடு சாப்பிடுவது அவசியம். மதியமும் சரிவிகித உணவாக இருக்க வேண்டும். உங்கள் உடல் நிலையை பொறுத்து உணவுகளை எடுக்க பழகிக் கொள்ளுங்கள். 30 வயதை கடந்துவிட்டாலே உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தியானம், யோகா செய்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதையும், உடலையும் பாதிக்கும் எந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இப்படி இருந்தால் எப்போதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ